பொறுக்கி மாதிரி இருக்க.. விமர்சனத்திற்கு விளாசிய பிக்பாஸ் அனிதா சம்பத்.. - வைரலாகும் பதிவு இதோ..

மோசமான கமெண்ட்டிற்கு பதிலடி கொடுத்த அனிதா சம்பத் -  Anitha sampath react to abusive comment | Galatta

தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சியாக இருப்பது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்தியா முழுவதும் பிரபலமான இந்த நிகழ்ச்சி தமிழிலும் கடந்த 6 வருடங்களாக ஒளிப்பரபாகி கொண்டு இருக்கின்றது. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியினை உலகநாயகன் கமல் ஹாசன் இதுவரை தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசன் தொடங்கி சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 6வது சீசன் வரை இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் தங்கள் ஆதரவினை மிகப்பெரிய அளவு கொடுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி மக்களிடம் நன்மதிப்பையும் விமர்சித்தவரும் அதிகம்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். செய்தி துறையில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து பிக்பாஸ் வீட்டில்  80 நாட்களுக்கு மேல் இருந்தார். பின் சிலம்பரசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். அதன்பின் பிக்பாஸ் அனிதா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விமலின் ‘தெய்வ மச்சான்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இவர் விழா மேடைகளில் தொகுப்பாளினியாகவும் தற்போது செயல்பட்டு வருகிறார். மேலும் சமூக ஊடகங்களில் வித்யாசமான முறையிலும் தனித்துவமான முறையிலும் பல வீடியோக்களை உருவாக்கி அதனை பதிவிட்டு வருகிறார்.

இவருடைய தனித்துவமான உள்ளடக்கத்திற்காகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அனிதா அவருடைய தோழி  ஒருவருடன் நடித்து வீடியோ ஒன்றை பதிவிட்டார். அது ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அந்த பதிவின் கீழ் ஒருவர். “பார்க்க பொறுக்கி மாதிரியே இருக்க..” என்று கமெண்ட் செய்துள்ளார்.

the kerala story movie 4th week box office collection report

இந்த மோசமான கமெண்ட்டிற்கு அனிதா சம்பத், “உன்ன யாரோ இப்படி சொல்லியிருப்பாங்க போல. அதை இன்னொருத்தருக்கு சொல்லி ஆறுதல் பட்டுக்குற.. விரைவில் நீங்கள் இதிலிருந்து  குணமடைய வேண்டும்.. உனக்கு லைக் போட்டவனும் எங்கேயோ செம்மையா அடி வாங்கிருப்பான் போல..” என்று விளாசியுள்ளார். இதையடுத்து அனிதா சம்பத்தின் இந்த ரிப்ளே அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயனின் Sci Fi திரைப்படமான ‘அயலான்’ டீசர் எப்போது.? – ரசிகர்களால் வைரலாகும் படக்குழுவின் அறிவிப்பு இதோ..
சினிமா

சிவகார்த்திகேயனின் Sci Fi திரைப்படமான ‘அயலான்’ டீசர் எப்போது.? – ரசிகர்களால் வைரலாகும் படக்குழுவின் அறிவிப்பு இதோ..

“உண்மை கதை என்று சொன்னால் மட்டும் போதாது..” தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிராக கமல் ஹாசன் கருத்து.. - விவரம் உள்ளே..
சினிமா

“உண்மை கதை என்று சொன்னால் மட்டும் போதாது..” தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிராக கமல் ஹாசன் கருத்து.. - விவரம் உள்ளே..

வெறித்தனமான Vibe -ற்கு ரெடியா..!  ஜெயிலர் படம் குறித்து தமன்னா கொடுத்த அப்டேட்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

வெறித்தனமான Vibe -ற்கு ரெடியா..! ஜெயிலர் படம் குறித்து தமன்னா கொடுத்த அப்டேட்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..