'சொற்களுக்கு உயிர் இருக்கிறது!'- விஜய் டிவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போட்டியாளரை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! விவரம் இத

விஜய் டிவி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போட்டியாளரை பாராட்டிய முக ஸ்டாலின்,cm mk stalin appreciates tamil pechu engal moochu contestant | Galatta

தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாகவும் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஃபேவரட் சேனலாகவும் திகழும் விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களிடையே தமிழின் பெருமையை பேசும் வகையில் தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விஜய் டிவி நடத்தி வரும் நிகழ்ச்சி தான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு. கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி தற்போது மீண்டும் சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. முன்னதாக இதனை அறிவிக்கும் வகையில் வெளிவந்த முதல் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களே தமிழின் பெருமையை பேசி துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த ப்ரோமோ வீடியோவில், “தமிழுக்கும் அமுதென்று பேர்… அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். தமிழை தமிழே என அழைப்பதில் இருக்கும் இன்பம் வேறு எதிலுமே கிடையாது என்றார் தமிழின தலைவர் கலைஞர்... இத்தகைய வெள்ள தமிழை வெல்லும் தமிழை களமாக்கி நடைபெறும் நிகழ்ச்சி தான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு! பேச்சு மூச்சாக இருக்க வேண்டும் அதுவும் தமிழ் பேச்சாக இருக்க வேண்டும் அதுவும் சுயமரியாதை பேச்சாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்… அந்த வகையில் என் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி” என்று  மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து வாராவாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்களை தமிழால் கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போட்டி சுற்று ஒன்றில் பேசிய போட்டியாளர் திருமிகு தே.நர்மதா அவர்களின் பேச்சு ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் வென்றது. இட ஒதுக்கீடு குறித்து அவர் பேசிய பேச்சும் ஒவ்வொரு வார்த்தையும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இந்நிலையில் இந்த பேச்சை கவனித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தே.நர்மதாவின் வீடியோவை பதிவிட்டு பாராட்டி இருக்கிறார். அந்த பதிவில், 

“சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் #தமிழ்ப்பேச்சு_எங்கள்மூச்சு நிகழ்ச்சியை @vijaytelevision தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்" என வாழ்த்தினேன்.

எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய திருமிகு தே.நர்மதா அவர்களின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்!

அனைவரும் சொல்வோம் #ReservationIsOurRight!”
என குறிப்பிட்டு இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அந்த பதிவும், பேச்சாளர் தே.நர்மதா அவர்களின் அந்த வீடியோவும் இதோ…
 

சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் #தமிழ்ப்பேச்சு_எங்கள்மூச்சு நிகழ்ச்சியை @vijaytelevision தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப்… pic.twitter.com/d1nT6WbXV3

— M.K.Stalin (@mkstalin) May 29, 2023

“கண்டிப்பா அவருடன் படம் பண்ணனும்..” லோகேஷ் கனகராஜ் குறித்து டோவினோ தாமஸ்.. - சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு நேர்காணல் இதோ..
சினிமா

“கண்டிப்பா அவருடன் படம் பண்ணனும்..” லோகேஷ் கனகராஜ் குறித்து டோவினோ தாமஸ்.. - சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு நேர்காணல் இதோ..

சந்திரமுகி 2 படப்பிடிப்பில் வடிவேலுவின் கலக்கல் காமெடி.. - வைப் செய்யும் ராதிகா சரத்குமார்.. வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

சந்திரமுகி 2 படப்பிடிப்பில் வடிவேலுவின் கலக்கல் காமெடி.. - வைப் செய்யும் ராதிகா சரத்குமார்.. வைரல் வீடியோ உள்ளே..

இரண்டாவது திருமணம் ஏன்? முதல் முறையாக மனம் திறந்த ஆஷிஷ் வித்யார்த்தி.. - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

இரண்டாவது திருமணம் ஏன்? முதல் முறையாக மனம் திறந்த ஆஷிஷ் வித்யார்த்தி.. - வைரலாகும் வீடியோ இதோ..