பிரபாஸின் பிரம்மாண்ட ‘ஆதிபுருஷ்’ படத்தின் 2nd Single .. – காதல் காட்சிகளுடன் வெளியான ‘ராம் சீதா ராம்’ பாடல் வீடியோ இதோ..

பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் இரண்டாவது பாடல் இதோ - Ram Sita ram song from Prabhas Adipurush | Galatta

இந்தியா முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து பான் இந்திய ஸ்டாராக வலம் வரும் நடிகர் பிரபாஸ். தற்போது அவர் கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார்.  அதையடுத்து Sci Fi திரைப்படமாக பக்கா ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக தெலுங்கு மற்றும் இந்தி என இரு மொழிகளில் பைளிங்குவலாக உருவாகி பான் இந்திய திரைப்பட அளவில் உருவாகி வரும் ‘புரோஜக்ட் கே’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே பிரபாஸ் இதிகாச கதையான இராமாயணத்தை தழுவி உருவாகும் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.  T Series films மற்றும் Retrophiles இணைந்து இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராமானாக பிரபாஸ் நடிக்க சீதையாக கீர்த்தி சனான் நடித்துள்ள்ளார். மேலும் இராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய , அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தில் பயன்படுத்தப்பட்ட கம்யூட்டர் கிராபிக்ஸ் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் சரியாக VFX செய்யாமல் வெளியானதால் இப்படத்தை ரசிகர்கள் அதிகளவு விமர்சம் செய்தனர். பின் அந்த பிரச்சனைகளை சரி செய்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. முன்பை விட இந்த டிரைலருக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவினை வழங்கி வந்தனர். மேலும் அதே நேரத்தில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள ராம் சீதா ராம் என்ற இரண்டாவது பாடல் காதல் காட்சிகளுன் மற்றும் சில முக்கிய காட்சிகளுடன் தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அஜய் - அதுல் இசையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில்  வெளியாகியுள்ள இப்படத்தின் பாடல் தமிழில் ஜி.முரளிதரன் வரிகள் எழுதியுள்ளார். கார்த்திக் இப்பாடலை பாடியுள்ளார்.

அட்டகாசமான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இப்படத்தின் பாடல் தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்திய அளவு ரசிகர்களின் எதிர்பார்பை பெற்று ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 16 ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  

 

 

சந்திரமுகி 2 படப்பிடிப்பில் வடிவேலுவின் கலக்கல் காமெடி.. - வைப் செய்யும் ராதிகா சரத்குமார்.. வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

சந்திரமுகி 2 படப்பிடிப்பில் வடிவேலுவின் கலக்கல் காமெடி.. - வைப் செய்யும் ராதிகா சரத்குமார்.. வைரல் வீடியோ உள்ளே..

இரண்டாவது திருமணம் ஏன்? முதல் முறையாக மனம் திறந்த ஆஷிஷ் வித்யார்த்தி.. - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

இரண்டாவது திருமணம் ஏன்? முதல் முறையாக மனம் திறந்த ஆஷிஷ் வித்யார்த்தி.. - வைரலாகும் வீடியோ இதோ..

ஐ.பி.எல் இறுதி போட்டியில் மேடையேறும் தளபதி விஜய் பட பாடகி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

ஐ.பி.எல் இறுதி போட்டியில் மேடையேறும் தளபதி விஜய் பட பாடகி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு இதோ..