MSதோனியின் தயாரிப்பில் முதல் தமிழ் படம் LET'S GET MARRIED... ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு முன் வெளிவந்த SPECIAL UPDATE இதோ!

MSதோனி தயாரிக்கும் LET'S GET MARRIED பட டீசர் அப்டேட்,Ms dhoni entertainment first movie lets get married teaser update | Galatta

உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி நேற்று மே 28ஆம் தேதி அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது கனமழையின் காரணமாக போட்டி நேற்று நடைபெறாததால் இன்று மே 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே ஐபிஎல் 2023 இறுதி போட்டிக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானுமான மகேந்திர சிங் தோனி அவர்கள் தனது தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமான LGM (Let's Get Married) திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சினிமாவில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷி உடன் இணைந்து தோனி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக தமிழில் முதல் படத்தை தயாரித்துள்ளது. அந்த வகையில் தோனி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் முதல் படமாக அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி வரும் LGM (Let's Get Married) படத்தில் கதையின் நாயகனாக தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். அவருடன் இணைந்து நதியா மற்றும் லவ் டுடே நாயகி இவானா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நகைச்சுவை நடிகர் யோகி பாபு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தீபா, விடிவி கணேஷ், ஸ்ரீநாத்  ஆர்ஜே விஜய், வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஷ்வாஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பு செய்ய, LGM (Let's Get Married) திரைப்படத்திற்கு இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகி இருக்கும் LGM திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM திரைப்படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த LGM (Let's Get Married) திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து LGM திரைப்படத்தின் இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரும் என பட குழுவினர் அறிவித்துள்ளனர்.  இந்நிலையில் தற்போது LGM திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக் குழு படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது. இது குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டரில் பக்கத்தில், “நம்ம எல்லோரோட ஃபேமிலியிலும் இருக்கிற லவ், ஃபன், எமோஷன், சண்ட, ரகளை இது எல்லாமே இந்த ஃபேமிலியிலும் இருக்குங்க” எனக் குறிப்பிட்டு படத்தின் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் ஒன்றிணைந்த LGM திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு “டீசர் விரைவில்” வருகிறது என தெரிவித்துள்ளார். நடிகர் ஹரிஷ் கல்யாணின் அந்தப் பதிவு மற்றும் புதிய போஸ்டர் இதோ…
 

Namma ellaroda family’liyum irukre love, fun, emotions, sanda, ragala..idhu ellame indha family’layum irukkunga. Presenting to you all the #LGM family ❤️❤️

Teaser coming soon 😉 @DhoniLtd @msdhoni @SaakshiSRawat @i__ivana_ @Ramesharchi @ActressNadiya @iyogibabu pic.twitter.com/F67V0S0WGF

— Harish Kalyan (@iamharishkalyan) May 27, 2023

உலக பட்டினி தினத்தில் ஏழை மக்களின் பசியை போக்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்! வீடியோ இதோ
சினிமா

உலக பட்டினி தினத்தில் ஏழை மக்களின் பசியை போக்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்! வீடியோ இதோ

செல்ல மகனுக்கு செம்ம பெயர் வைத்த விஜய் டிவி பிரபலம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் வீடியோ இதோ!
சினிமா

செல்ல மகனுக்கு செம்ம பெயர் வைத்த விஜய் டிவி பிரபலம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் வீடியோ இதோ!

'இன்னும் 4 நாட்களில் திருமணம்!'- எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந்துக்கு கார் விபத்து... நடந்தது என்ன? விவரம் உள்ளே
சினிமா

'இன்னும் 4 நாட்களில் திருமணம்!'- எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந்துக்கு கார் விபத்து... நடந்தது என்ன? விவரம் உள்ளே