பிக் பாஸ் 4 சீசனில் கடந்த வாரம் கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் சில போட்டியாளர்கள் ஒழுங்காக விளையாடாமல் மற்றவர்கள் நாமினேட் ஆக கூடாது என்பதற்காக விட்டுக்கொடுத்து போன் காலை கட் செய்தனர். இதனால் இந்த கால் சென்டர் டாஸ்க் போர் அடித்தது என ரசிகர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் மற்றும் சொதப்பியவர்களை வரிசைப்படுத்தி ஒன்று முதல் 13 வரை ரேங்க் அளிக்கவேண்டும் என புதிய அறிவிப்பை பிக் பாஸ் வெளியிட்டார். 

அதற்காக போட்டியாளர்கள் நிச்சயம் சண்டை போடுவார்கள் என எதிர்பார்த்தது போலவே தான் நடந்தது. சனம் ஷெட்டி மற்றும் ஜித்தன் ரமேஷ் நேற்று சண்டை போட்ட நிலையில், இன்றைய ப்ரொமோ வீடியோவில் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஜித்தன் ரமேஷ் இருவரும் வாக்குவாதம் செய்வது காட்டப்பட்டு உள்ளது. கேட்ட கேள்விக்கெல்லாம் எதற்கு ஒரு மணி நேரம் பதில் சொல்லிட்டு, நான் போனை வைத்துவிட்டு போயிருப்பேனே என கூறும் பாலாஜி ஆரி உடன் நடந்த தனது உரையாடல் பற்றி பேசி இருக்கிறார். 

மேலும் மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்ற போன் வைத்தவர்கள் டாப் 6ல் வரக்கூடாது என்றும் அவர் பேசி இருக்கிறார். இது ஒருபுறமிருக்க அர்ச்சனா மற்றும் ஷிவானியின் லேட்டஸ்ட் உரையாடல் பிக்பாஸ் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. பைனலில் இருக்க வாய்ப்பிருக்கும் 5 பேர் யார் என சொல்லுங் என ஷிவானி கேட்டார். அதற்கு பதில் கூறிய அர்ச்சனா, பாலாஜி, ரம்யா, ரியோ, சோம், ஆஜித் அல்லது ஷிவானி என தான் மனதில் நினைப்பதை ஒப்பனாகவே பேசினார்.

மேலும் இனி வரும் வாரங்களில் டபுள் விக்ஷன் நடைபெறவும் வாய்ப்பு இருக்கிறது எனவும் அர்ச்சனா கூறினார். பைனலிஸ்ட் லிஸ்டில் அர்ச்சனா தன் பெயரையே கூறவில்லை என்பதால் அவர் பைனல் வரை செல்வாரா என்பது பற்றி மிகவும் சந்தேகத்துடன் இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், டாஸ்க் ரேங்க்கிங் குறித்த பஞ்சாயத்தால் பரபரப்பாகிறது பிக்பாஸ் வீடு. நான் நல்ல கன்டென்ட் கொடுத்தேன்...எனக்கு தான் முதல் இடம் என்று சண்டை போடுகிறார் அர்ச்சனா. இப்படியிருக்க ரம்யா, அனிதா, ரியோ, ஆஜீத் மற்ற இடங்களில் நிற்கின்றனர். இதனால் இந்த வார எவிக்ஷனில் நிறைய ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.