பிக்பாஸ் 4 : சனம் பேசிய வார்த்தையால் கொந்தளித்த ரியோ !
By Sakthi Priyan | Galatta | November 25, 2020 12:00 PM IST
பிக் பாஸ் வீட்டில் நேற்று முதல் கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் பாதி போட்டியாளர்கள் கால் சென்டர் பணியாளர் போலவும், மீதம் இருப்பவர்கள் அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர் போலவும் இருப்பார்கள். இந்த டாஸ்கில் நேற்று அர்ச்சனா - பாலாஜி, சனம் - சம்யுக்தா ஆகியோர் போனில் பேசியது பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்தது.
நேற்று ரியோ மற்றும் பாலாவிற்கு இடையே சில சலசலப்பு ஏற்பட்டது. அதுவரை பேசாமல் இருந்த ரியோ, ஆவேசமாகிவிட்டார். மைண்ட் யூவர் வோர்டுஸ் பாலாஜி, இதுவரைக்கும் நான் எதுவும் பேசல நீங்க எப்படி, கேங்கா சேர்ந்து கார்னர் பண்றோம்னு சொல்லலாம். நீ யார் யார் பத்தி பேசுனீயோ அவங்கதான் உன்னை கேட்குறாங்க. நான் ஏதாவது பேசினேனா? உன்னைதான் இங்கே மதிக்கவே இல்லையே என கிழித்து விட்டார்.
இன்றைய முதல் ப்ரோமோ வீடியோவில் சோம் சேகர் கால் சென்டரில் இருக்கும் கேப்ரியல்லாவுக்கு கால் செய்து பேசுகிறார். மற்றவர்களை போல கோபத்துடன் எதுவும் பேசாமல், கேப்ரியல்லாவின் நாய் பற்றி பேசினார் சோம். மேலும் ஒரு கட்டத்தில் போனை வைத்துவிடு என சோம் கூறியதால் கேபி உடனே வைத்துவிட்டார். I hope you win என அவர் கூறி துண்டித்துவிட்டார்.
சோமை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற தான் கேபி இப்படி வேண்டுமென்றே செய்திருக்கிறார். இதனால் சோம், பாலாஜி உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் இது பற்றி கோபத்துடன் பேசி இருக்கிறார்கள். நேற்று நான் சொன்னது உருத்தியாகி விட்டது என பாலாஜி குற்றம்சாட்டி இருக்கிறார். அர்ச்சனா கேங்கில் இருக்கும் கேபி சோம் இருவரும் பிளான் செய்து இப்படி செய்து இருக்கிறார்கள் எனவும் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், சனம் ஷெட்டி கூறிய வார்த்தையால் கோபமடைகிறார் ரியோ. இந்த வீட்டில் குரூப்பிஸம் உள்ளது என கூறுகிறார் சனம். இப்போ என்ன பண்ணனும் சொல்றீங்க என ரியோ கேட்டு முடித்த பின் mind your words என்று கொந்தளிக்கிறார் ரியோ. இதை பார்த்து பாலாஜி மற்றும் ஷிவானி சாப்பிட்டுக்கொண்டே சிரிக்கின்றனர்.
#Day52 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/pOKYIvfp6U
— Vijay Television (@vijaytelevision) November 25, 2020
Man watches Bigg Boss and Avatar as doctors perform brain surgery on him
25/11/2020 11:18 AM
Breaking update on Kaithi producers' next big film - check out!
25/11/2020 11:09 AM
Veteran actor Vishwa Mohan Badola passes away at 84 - tributes pour in!
24/11/2020 05:32 PM