பிக் பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் டாஸ்க் கால் சென்டர் டாஸ்க். அதில் பாதி பேர் முதல் கால் சென்டர் ஊழியர்களாகவும், மீதி இருப்பவர்கள் அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளராக இருப்பார்கள். அவர்கள் கால் சென்டருக்கு போன் செய்து பேசி அழைப்பை துண்டிக்க வைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக செல்வார்கள். 

கால் சென்டர் ஊழியர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வாடிக்கையாளரை திருப்தி படுத்தவேண்டும். பேசி முடித்தபிறகு மீண்டும் போன் செய்து தங்களது ஸ்டார் ரேட்டிங்கையும் கேட்க வேண்டும். முதல் ஆளாக அர்ச்சனா கன்பெக்ஷன் ரூமில் இருந்து பாலாஜிக்கு அழைப்பு செயதார். அர்ச்சனா கேட்ட முதல் கேள்வியே நேற்று பேசும்போது நான் பிடித்தவர்களை முன்னாடி வைத்து விளையாடுவதாக சொன்னீர்கள், அது யார் ?என கேட்டார். சோம், ரியோ மற்றும் கேபி என பாலாஜி பதில் சொன்னார்.

அதன் பின் லவ் பெட், சோம் சரியாக பர்பார்ம் செய்யாதது, ஷிவானி மீதான அன்பு என பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். I hate you அர்ச்சனா என சொல்வதற்கு என்ன காரணம் என கேட்டு பாலாஜியை திக்குமுக்காட வைத்தார் அர்ச்சனா. ஆனாலும் அர்ச்சனாவுக்கு தொடர்ந்து சளைக்காமல் பதிலடி கொடுத்தார். இறுதியில் நேரம் முடிந்ததால் அர்ச்சனா அடுத்த வார நாமினேஷனுக்கு சென்றார்.

பாலா கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர் என்ன என அர்ச்சனா வற்புறுத்தி கேட்டது பற்றி பாலாஜி கோபத்துடன் வெளியில் வந்து பேசினார். இது தொடர்பாக வாக்குவாதமும் நடைபெற்றது. அதன் பின் பாலாஜியை அர்ச்சனா, ரியோ, கேபி உள்ளிட்டவர்கள் சேர்ந்து கார்னர் செய்தனர். அதை பாலாஜியே குறிப்பிட்டு அவர்களுடன் சண்டை போட்டார்.

இனி என்னை அக்கா என கூப்பிடதே என அர்ச்சனா கோபத்துடன் பாலாஜியுடன் கூறினார். மேலும் பாலாஜி கையில் இருந்த பெண் பெயர் பற்றி கேட்டது உன் morals உயர்வாக இருக்கிறது என காட்ட மட்டும் தான், அது என் மகள் மீது சத்தியம் என அர்ச்சனா விளக்கம் கொடுத்தார். சனம் கன்பெக்ஷன் ரூமில் இருந்து சம்யுக்தாவுக்கு போன் செய்தார். கலீஜாக பேசுகிறேன் என நீங்கள் எப்படி சொல்லலாம் என கேட்டு வாக்குவாதம் நீண்டுகொண்டே போனது. இறுதியிகள் சனம் நாமினேட் ஆனார். அதன் பின் ஆரி வந்து சம்யுக்தாவிடம் சண்டை போட்டார். வளர்ப்பு சரியில்லை என நீ எப்படி சொல்லலாம் என அவர் கேட்டார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கேபிக்கு போன் செய்து ஓட்டுகிறார் சோம் சேகர். இதை பார்த்த ரசிகர்கள் க்யூட்டான ப்ரோமோ என்று கூறி வருகின்றனர். பற்களில் கேப் இருப்பதால் தான் கேபி என்று நகைச்சுவையாக கூறுகிறார் சோம். சிரிப்பு தாங்க முடியாமல் கேபி போனில் பேசுகிறார். இதை பார்த்த பாலா மற்றும் சனம் கடுப்பில் அடுத்த பிளான் போடுகிறார்கள்.