இந்திய திரையுலகின் சாக்லேட் பாய் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் நடிகர் மாதவன். நடிகர் மாதவன் கடைசியாக திரையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு மகளிர் மட்டும் படத்தில் ஒரு கேமியோ ரோலில் காணப்பட்டார். 

அதன்பிறகு மாதவன் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டு ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் மாதவன் நடித்த நிசப்தம்/ சைலன்ஸ் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர், நடிகைகளில் மாதவனும் ஒருவர். இந்நிலையில் மாதவன் பகிர்ந்த த்ரோபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பனிச்சறுக்கு செய்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் மாதவன். இந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது. 

மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாறா. சார்லி ரீமேக்கான இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் இதில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவிஞர் தாமரை பாடல் வரிகள் எழுதியுள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்த இந்த படம் டிசம்பர் 17-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. 

கொரோனா நோய் பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே மாறா திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் துவங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)