2009-ம் ஆண்டு ஜெய் நடித்து வெளியான வாமனன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் இவரது ரோல் பெரிதளவில் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை என அசத்தலான திரைப்படங்களில் நடித்தார். 

தமிழ் ரசிகர்களை அசர வைத்ததோடு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என மற்ற மொழிகளிலும் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். கடந்த ஆண்டு பிரியா ஆனந்த் நடிப்பில் LKG மற்றும் ஆதித்ய வர்மா படங்கள் வெளியானது. சமீபத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக ஜேம்ஸ் எனும் படத்தில் ஒப்பந்தமானார். சேத்தன் குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஹம்பியில் நடைபெற்றது.

இவர் இப்பொழுது ஹிந்தியில் வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் தி சிம்பிள் மர்டர் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். தி சிம்பிள் மர்டர் என்ற வெப் சீரிஸ் ஏற்கனவே ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், வெப் சீரிஸின் ப்ரமோஷனுக்காக 2000 ரூபாய் தாள்களால் ஆன பண மாலையை அணிந்து கொண்டு சோபாவில் அமர்ந்தபடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியா ஆனந்த். இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இனி உங்க காட்டுல மழை தான்...அதுவும் பணமழை தான் என்று வாழ்த்தி கமெண்ட் செய்கின்றனர் இணையவாசிகள். 

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள சுமோ திரைப்படத்தில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த். பிப்ரவரி 14, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹோசிமின் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு, வி.டி.வி கணேஷ் ஆகியோருடன் சுமோ வீரர் Yoshinori Tashiro-ம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை ஜப்பானில் படமாக்கியுள்ளது படக்குழு. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். சுமோ விளையாட்டு சீனா மற்றும் ஜப்பானில் மிகவும் பிரபலம் என்பதால், இந்தப் படத்தை சீனா மற்றும் ஜப்பானில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Anand (@priyawajanand)