தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் முதல் மூன்று சீசனில் பங்கேற்ற பிரபலங்கள் பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களின் ஆதரவை பெற்று நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசன் ஜூலையில் தொடங்கவிருந்தது,கொரோனா தாக்கத்தால் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலையில் நடைபெறவிருந்த இந்த தொடரின் ஷூட்டிங் தள்ளிப்போனது.

எப்போதும் பிக்பாஸ் தொடரில் Wildcard முறையில் சில போட்டியாளர்கள் போட்டி ஆரம்பித்து சில நாட்கள் கழித்து வீட்டிற்குள் நுழைவார்கள்,அப்படி சீசன் 4-ல் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா இருவரும் நுழைந்துள்ளனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடரில் சிலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த தொடரில் முக்கிய போட்டியாளராக இருந்து வந்த சம்யுக்தா இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.தற்போது இவரது பழைய நடன வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.நடிகர் சதிஷ் மற்றும் தொகுப்பாளினி பாவனாவுடன் இணைந்து நடனமாடும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Thendral Katru Offl (@thendral_katru_offl)