மழையில் நடனமாடி வீடியோ வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால் !
By Sakthi Priyan | Galatta | November 25, 2020 14:09 PM IST
ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாம் சீசன் மூலம் உலகளவில் பிரபலமானார் சாக்ஷி. அதன் பிறகு சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க, சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
சாக்ஷி பதிவிடும் ஃபிட்னஸ் டிப்ஸால் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலம் கூடியது. தமிழ் மக்களிடையே பிரபலமான முகமாக சாக்ஷி மாறினார். சில படங்களில் பிறருக்கு டப்பிங் கொடுத்துள்ளார் சாக்ஷி. பல விழா மேடைகளில் இவர் நடனமாடியுள்ளார். சென்ற லாக்டவுன் நேரத்தில் ஜிம் மூடப்பட்டு இருந்ததால் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வீடியோக்களை வெளியிட்டார் சாக்ஷி. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் வாசிகள் பகிர்ந்து வைரலாக்கினர்.
இந்நிலையில் தனது வீட்டின் மொட்டை மாடியில் கொட்டும் மழையில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சாக்ஷி. இதனை கண்ட ரசிகர்கள், நிவர் புயலில் இப்படி ஒரு ஆட்டமா என்று பாராட்டி வருகின்றனர். மேலும் கீழே விழப்போறீங்க எச்சரிக்கையாக இருங்கள் சாக்ஷி என்று அக்கறையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்தில் சாக்ஷி நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டெடி. ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 படத்திலும் முக்கிய ரோலில் நடிக்கிறார். சில நாட்கள் முன்பு இயக்குனர் SA சந்திரசேகர் இயக்கத்தில் துவங்கியுள்ள புதிய ப்ராஜெக்ட்டில் இணைந்தார் சாக்ஷி. சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்கும் இந்த ப்ராஜெக்ட் வெப் சீரிஸா அல்லது திரைப்படமா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு சாக்ஷிக்கு சிறந்த ஆண்டு என்றே கூறலாம். ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். நந்தா இயக்கிய 120 hours திரைப்படமாகும்.
Thalapathy Vijay's Master album's new huge milestone after Mersal and Bigil
25/11/2020 01:32 PM
Durgavati Official Trailer - Remake of Anushka's Bhaagamathie - check out
25/11/2020 01:15 PM