காதலரை அறிமுகம் செய்த பிக் பாஸ் ஆயிஷா .. இவர்தான் அந்த பிரபலம்.. - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

தனது காதலரை அறிமுகப்படுத்திய பிக் பாஸ் புகழ் ஆயிஷா - Bigg boss fame Ayesha shares her boy friend pictures | Galatta

தமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்தி மொழியில் பல சீசன்களை கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் வெற்றிகரமாக 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. நான்கு மாதம் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் அதிகளவு ரசிகர்களை தக்க வைத்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் தொடங்கியது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்சியை வழக்கம் போல் இந்த முறையும் உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். பல்துறையில் இருந்து வந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி இந்த முறை 24 மணி நேரமும் ஒளிப்பரப்பட்டது. வழக்கம் போல இந்த சீசனும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இந்த சீசனில் அதிரடியாய் தொடங்கி அதிகளவு விமர்சனம் பெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. பிக் பாஸ் டைட்டிலை சின்னத்திரை நடிகர் அசீம் தட்டி சென்றார். இரண்டாம் இடத்தில் பிரபல தொகுப்பாளரும் அரசியல் பிரமுகருமான விக்ரமன் பிடித்தார். மூன்றாவது இடத்தில் சாமானிய மனிதர்கள் பட்டியலில் போட்டியாளராக வந்த திருநங்கை ஷிவின் கணேஷன் இடம் பிடித்தார். இந்த சீசனில் விளையாடிய பெரும்பாலான போட்டியாளார்கள் தங்கள் தனித்துவத்தை வெளி காட்டி மக்களிடம் பிரபலம் அடைந்தனர். அந்த வகையில் இந்த சீசனில் அதிரடியாய் ஆட்டத்தை தொடங்கியவர் சின்னத்திரை நடிகை ஆயிஷா. அசீமுடன் ஏற்பட்ட வாக்குவாதம் மற்ற போட்டிகளில் காட்டிய தீவிரம் ஆயிஷாவை இணையத்தில் வைரலாக்கியது. அதன்பின் சில வாரங்கள் போட்டியில் சரியாக ஈடுபடவில்லை.  அதன்படி ஆயிஷா போட்டியிலிருந்து மக்களால் வாக்கு அடிப்படையில்  வெளியேற்றப்பட்டார்.  

இந்த நிகழ்ச்சியில் ஆயிஷா பல இடங்களில் தனக்கு ஒரு காதல் வெளியே இருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்திருந்தார். அந்த செய்தி அப்போது இணையத்தில் வைரலானது.அதன்படி யார் ஆயிஷாவின் காதலர் என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை  காதலர் தினத்தன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இணையத்தில் அந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வைரலானது. ஆயிஷா வின் காதலர் என்று அறிமுகப்படுத்தியவர் பிரபல புகைப்பட கலைஞர் ஹரன் ரெட்டி. இவர் பல திரைபிரபலங்களுக்கு ஆஸ்தான புகைப்பட கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

minnal murali director basil joseph blessed with beautiful baby girlஆயிஷா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பிரபல தொலைக்காட்சி தொடரான 'சத்யா' மூலம் புகழ் பெற்றவர். மேலும் 'மாயா', 'பொன்மகள் வந்தாள்' போன்ற தொடர்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகநாடு திரைப்படங்களின் TOP 10 வரிசையில் துணிவு திரைப்படம்.. அதிரடியான சாதனையை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் – முழு விவரம் இதோ..
சினிமா

உலகநாடு திரைப்படங்களின் TOP 10 வரிசையில் துணிவு திரைப்படம்.. அதிரடியான சாதனையை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் – முழு விவரம் இதோ..

தனுஷ் ரசிகர்களுக்கு Surprise கொடுத்த ‘வாத்தி’ படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

தனுஷ் ரசிகர்களுக்கு Surprise கொடுத்த ‘வாத்தி’ படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் Glimpse இதோ..

“கண்டிப்பா Sex Education தேவை..” இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்.. - அட்டகாசமான வைரல் வீடியோ இதோ..
சினிமா

“கண்டிப்பா Sex Education தேவை..” இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்.. - அட்டகாசமான வைரல் வீடியோ இதோ..