கவின் நடித்த டாடா திரைப்படத்தின் அட்டகாசமான காட்சியை வெளியிட்ட படக்குழு.. - ரசிகர்களை கவர்ந்த Glimpse இதோ..

டாடா படத்தின் சிறப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு -  Kavin Dada movie special sneak peek released | Galatta

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சின்னத்திரை நடிகர் கவின், அதன்பின் வெள்ளித்திரையில் காலடி வைத்து லிப்ட் திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகில் கவனம் பெற்றார். தற்போது கவின் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் ‘டாடா’. கல்லூரி வாலிபனாகவும் குழந்தைக்கு தந்தையாகவும் கவின் நடித்துள்ள டாடா திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு. ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழமெங்கும் கடந்த பிப்ரவரி 10 ம் தேதி 400 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டது.  இப்படத்தில் கவினுடன் இணைந்து அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையில் முன்னதாக பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எழில் அரசு.K ஒளிப்பதிவு செய்ய கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

எதிர்பார்த்தபடி டாடா  திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. மேலும்  பெரும்பாலான பகுதிகளில் நல்ல விமர்சனத்தை திரைப்படம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் சிறப்பு காட்சியை வெளியிட்டுள்ளது படக்குழு.

கவினிடம்  காதல் சொல்ல விரும்பும் பெண்ணிடம் பூடகமாக கவின் நிராகரிக்கும் காட்சி ரசிகர்களால் கவரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக படத்திலிருந்து இரண்டு சிறப்பு காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.கவின் நடிப்பில் முதல் முதலில் திரையரங்கில் வெளியாகும் படம் என்பதால் நடிகர் கவின் உணர்ச்சி பொங்க நெகிழ்ச்சியுடன் ரசிகர்களின் வாழ்த்து மழையில் உள்ளார். மேலும் சமீபத்தில் இப்படத்திற்கான நன்றி தெரிவிக்கும் விழா பத்திரிக்கையாளர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது இதில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கண்டிப்பா Sex Education தேவை..” இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்.. - அட்டகாசமான வைரல் வீடியோ இதோ..
சினிமா

“கண்டிப்பா Sex Education தேவை..” இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்.. - அட்டகாசமான வைரல் வீடியோ இதோ..

 “இதனால தான் நான் Bigg boss க்கு வரல”.. ரச்சிதா Fans Meet ல் மும்தாஜ்.. -  Emotional வீடியோ இதோ..
சினிமா

“இதனால தான் நான் Bigg boss க்கு வரல”.. ரச்சிதா Fans Meet ல் மும்தாஜ்.. - Emotional வீடியோ இதோ..

பிரிந்த குடும்பங்களை இணைக்கும் கவினின் ‘டாடா’ திரைப்படம்.. நெகிழ்ச்சி சம்பவம்.. -  வைரலாகும் இயக்குனரின் பதிவு இதோ..
சினிமா

பிரிந்த குடும்பங்களை இணைக்கும் கவினின் ‘டாடா’ திரைப்படம்.. நெகிழ்ச்சி சம்பவம்.. - வைரலாகும் இயக்குனரின் பதிவு இதோ..