அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்யும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு.. விவரம் உள்ளே..

அதிக விலை டிக்கெட் விற்பனைக்கு எதிராக உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம் - HC orders against sale of high priced movie tickets | Galatta

பொதுவாகவே பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அதிகமாகவே இருக்கும். எந்த வகை பொருளாதார நிலை குடும்பமாக இருந்தாலும் காலம் காலமாக பொழுதுபோக்க தேர்ந்தேடுக்கும் இடமாக திரையரங்குகள் உள்ளது. அதை கருத்தில் கொண்டே பண்டிகை நாட்களில் குறி வைத்தே  பல காலமாக உச்சநட்சத்திரங்களின் திரைப்படங்கள் பண்டிகை நாட்களில் வெளியாகிறது.  நான்கு நபர் கொண்ட ஒரு நடுத்தர குடும்பம் திரையரங்குகளுக்கு படம் பார்க்க சென்றால் டிக்கெட் விலையுடன் சிற்றுண்டிகள் மற்றும் போக்குவரத்து எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 2500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதுவே ஒரு நடுத்தர குடும்பம் அதிகமாக செலவிடும் பண்டிகை செலவாக பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க சில திரையரங்குகள் சாதராண டிக்கெட் விலையை விட கூடுதல் விலையை நிர்ணயித்து டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது என்று பல காலமாக குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதன்படி கடந்த 2016 இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்திற்கு பல திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலித்ததாக 2016 – 2017 ஆண்டுகளில் பெரம்பூரை சேர்ந்த வழக்கறிஞர் ஜி. தேவராஜன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளை சிறப்பு தனி குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து விசாரணை நடத்திய அரசு வருவாய் நிர்ணய ஆணையம் பதில் மனு பதிவு செய்தது.

அதில் கூடுதல் வசூல் செய்யும் திரையரங்குகளில் சிறப்பு தனி குழு அமைத்து கண்காணிக்கப்பட்டது. தமிழகமெங்கும் பல திரையரங்குகளில் சோதனை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது அதில் கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று கூறியிருந்தார். இந்த நடவடிக்கை பின்பும் இது போன்ற பல சட்ட விரோத செயல்கள், கூடுதல் கட்டணம் வசூலிப்பு திரையரங்குகளில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வழக்கு மீண்டும் உயர்நீதி மன்ற பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டது.

மேலும் இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் பண்டிகை நாட்களில் திரையரங்குகள்  அதிக கட்டணம் வசூலிக்கிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஏற்கனவே திரையரங்குகளின் டிக்கெட் விலை தொடர்பாக பிறப்பித்த உத்தரவு தொடர வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை தொடர் வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். இந்த உத்தரவை அடுத்து தமிழக அரசு தனி சிறப்பு வேகம் எடுத்து தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் பலரது கருத்தாக பார்க்கப்படுகிறது.  

சினிமா

"யாதும் ஊரே யாவரும் கேளிர்!"- கவனத்தை ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் முக்கிய பதிவு! காரணம் இதுதான்

வாழ்கைல மறக்கமாட்டேன்... தனுஷின் பொல்லாதவன் பட எங்கேயும் எப்போதும் பாடலின் சுவாரசியங்கள் பகிர்ந்த யோகிB! வீடியோ இதோ
சினிமா

வாழ்கைல மறக்கமாட்டேன்... தனுஷின் பொல்லாதவன் பட எங்கேயும் எப்போதும் பாடலின் சுவாரசியங்கள் பகிர்ந்த யோகிB! வீடியோ இதோ

பாபா ரீ ரிலீஸ்.. படக்குழுவினரை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. காரணம் இதுதான்.. - ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

பாபா ரீ ரிலீஸ்.. படக்குழுவினரை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. காரணம் இதுதான்.. - ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..