வழக்கம் போல வீக்கெண்ட் ஆனாலே, கமல் வருகையை எதிர்பார்த்து, எக்கச்சக்க பிக் பாஸ் ரசிகர்கள் ஒரே இடத்தில் ஆஜராகி அந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். சனிக்கிழமை எபிசோடிலும் கமல் வழக்கம் போல தனது அசத்தல் என்ட்ரியை கொடுத்ததை பார்த்த ரசிகர்கள், அவரது டிரெஸ், அவரது லுக் என பலவற்றையும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நாடா? காடா? டாஸ்க் வைத்து பிக் பாஸ் சனம் ஷெட்டிக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சண்டையை மூட்டி விட்டார். அந்த சண்டையை வார இறுதி நாட்களில் சமரசம் பண்ணி இருவரையும், கை கொடுத்துக்கோங்க என சொல்ல வைக்கலாம் என நினைத்து வந்த கமலுக்கே நிகழ்ச்சியில் பயங்கர ட்விஸ்ட் இருந்தது ஷாக்கிங்காக மாறியது.

சனம் ஷெட்டியை செங்கோல் கொண்டு அடித்து பெரிய தப்பு பண்ணிட்டேன் என ஆரம்பத்திலேயே சுரேஷ் தாத்தா ஒப்புக் கொண்டு, கமல் சாரோட பாதி வேலையை குறைச்சிட்டார். என்னங்க நீங்க, சனம் மேல தப்பு சொல்வீங்க, அவங்க உங்க மேல தப்பு சொல்வாங்க, நான் குறும்படம் ஏதாவது போட்டு யார் மேல தப்பு இருக்கு, யார் பண்ணது சரின்னு சொல்லலாம்னு பார்த்தா பொசுக்குன்னு இப்படி பண்ணிட்டீங்களே என்கிற ரேஞ்சுக்கு கமல் மாறிவிட்டார்.

அன்சீன்ல கூட காட்டாத சீனை கமலிடம் சுரேஷ் தாத்தா சொன்னது நிஜமாவே ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. அந்த டாஸ்க் முடிந்த உடனே சனம் ஷெட்டி வந்து, என்னிடம் மன்னிப்பு கேட்க வந்தாங்க, நான் தான் நீ அந்த நேரத்துல அவசரத்துல அப்படி பேசிட்டே, உன் மேல தப்பு இல்லை என சொல்லி விட்டேன் என்றும், ஒட்டு மொத்த பஞ்சாயத்தையும் முடித்து விட்டார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் சிலர் சக ஹவுஸ்மேட்டுகளால் நாமினேட் செய்யப்படுவார்கள். அவர்களில் குறைந்த வாக்குகளை பெறும் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆஜித் ஆகிய 5 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் 5 பேருமே முக்கியப் போட்டியாளர்களாக பார்க்கப்படும் நிலையில், யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது வெளியான ப்ரோமோவில், ஆஜீத்தை கேள்வி கேட்கிறார் கமல். நீங்களே சொல்லிட்டா நல்லது என்றும் கூறுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஒரு வேளை ஆஜீத் தான் இந்த வார எவிக்ஷனா என்று யூகித்து வருகின்றனர். இன்னும் என்னென்னெ சுவாரஸ்யங்கள் எல்லாம் பிக்பாஸ் வீட்டில் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.