கோவையில் கொலைகாரனுடன் மலர்ந்த காதலால் 15 வயது சிறுமி வீட்டை விட்டு சென்ற நிலையில், “கணவன் மனைவி ஆகிவிட்டதாக” கூறி பெற்றோரிடம் செல்ல மறுத்து அடம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

“தமிழ் நாட்டின் சிறுமிகளுக்கு இப்ப என்னாச்சு?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது. காரணம், இந்த சமூகத்தில் காதல் என்ற பெயரில் நம்பி ஏமாறும் சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் கோவையில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

கோவை புளியகுளத்தைச் சேர்ந்த 21 வயதான சண்முகம் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் வழக்கத்தை விட அதிக அளவில் மூழ்கிக் கிடந்து உள்ளார். அதன்படி, சண்முகம் நிறையப் பெண்களுடன் பெரசனல் சாட்டிங்கில் மூழ்கிக் கிடந்து உள்ளார்.

அதன்படி, இன்ஸ்டாகிராமில் தன்னை ஒரு ஹீரோவைப் போல சித்தரித்து கொண்டிக்கொண்டு வந்துள்ளார். முக்கியமாக, தினமும் ஹீரோ ரேஞ்சுக்கு புது புது போட்டோக்களை போட்டோ, பல பெண்களிடமும் சாட்டி செய்து, தன்னை தானே அறிமுகம் படுத்திக்கொண்டார். அப்படி, புது புது போட்டோக்கள் போட தொடங்கிய ஒரே மாத்தில் சண்முகத்திடம் காதல் வலையில் விழுந்திருக்கிறார் போத்தனூரைச் சேர்ந்த ஒரு15 வயது சிறுமி. 

அதே போல், சண்முத்தைப் போலவே இரவு பகல் என்று செல்போன் சாட்டிங்கிலேயே அந்த சிறுமியும் மூழ்கி கிடந்து உள்ளார். இதனால், மகளின் செயல்பாடுகளில் சிறுமியின் பெற்றோருக்கு சந்தேகம் வந்து, சிறுமியின் செல்போனை வாங்கிப் பார்த்து உள்ளனர். அப்போது, சிறுமியின் காதல் விவகாரம், அவரது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை கடுமையாக கண்டித்து உள்ளனர். அத்துடன், “காதல் எல்லாம் வேண்டாம் என்று, சிறுமிக்கு அறிவுரையும் கூறி உள்ளனர்.

இந்த விசயத்தை சிறுமி, காதலன் சண்முகத்திடம் கூறி உள்ளார். இதனையடுத்து, “நீ வீட்டை விட்டு வந்து விடு. உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன். இருவரும் ஜாலியாக இருக்கலாம்” என்கிற ரீதியில், சிறுமியிடம் ஆசையாகப் பேசியிருக்கிறான் சண்முகம். காதல் ஆசையில், விபரம் தெரியாத அந்த சிறுமியும், வீட்டை விட்டு வெளியே வர சம்மதம் தெரிவித்து உள்ளார்.

இதனால், ஏற்கனவே சண்முகம் சிறையில் இருந்தபோது, அவருக்கு அங்கு பழக்கமான கஞ்சா கைதிகளான அமர்நாத், வல்லரசு ஆகிய இருவரின் உதவியுடன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அந்த 15 வயது சிறுமியை சண்முகம் கடத்தி உள்ளான்.

இதனையடுத்து, அந்த சிறுமியை ஆசை தீர பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். அதன் தொடர்ச்சியாக, தனக்கு தெரிந்த ஒரு பெண் வீட்டில் அந்த சிறுமியை தங்க வைத்து விட்டு, “உனக்கு 18 வயது ஆகும் வரை, நீ இங்கேயே இரு. அதன் பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம்” என்று, நம்பிக்கையைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து நைசாக சென்று உள்ளான்.

அதே நேரத்தில், சிறுமியை காணவில்லை என்று, அவரது பெற்றோர் பதறிப்போய், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த சிறுமி தங்கி இருக்கும் இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டனர். 
ஆனால், அந்த சிறுமியோ, “நாங்கள் இருவரும் கணவன் - மனைவியாக வாழத் தொடங்கி விட்டோம். அதனால், இனி உங்களுடன் வர முடியாது” என்று, தனது பெற்றோரிடம் அடம் பிடித்து நின்று உள்ளார். இதனால், சிறுமியின் பெற்றோர், தனது பாச போராட்டத்தை நடத்தி உள்ளனர். ஆனாலும், சிறுமி தனது முடிவில் விடப் பிடியாக இருந்து உள்ளார். 

அதே நேரத்தில், சிறுமியை கடத்திய சண்முகத்தையும், போலீசார் தேடி கண்டுபிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். அத்துடன், சிறுமியை கடத்த சண்முகத்திற்கு உதவிய சண்முகத்தின் நண்பர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இந்த 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட காதலன் சண்முகம் உள்ளிட்ட 3 பேர் மீதும் கொலை மற்றும் கஞ்சா வழக்குகளில் கைதாகி, தற்போது ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரிய வந்தது. 

இதனால், சிறுமியின் எதிர்கால நலன் கருதி, அவரை அங்குள்ள காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.