விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரையில் தற்போது டிஆர்பியில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக ராஜா ராணி 2 சீரியல் உடன் இணைந்து மெகா சங்கமம் என்கிற பெயரில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தற்போது வழக்கம் போல ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள பஹிரா படத்தில் நடிகர் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் இணைந்துள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்திற்காக தனது டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார் என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார் அகிலன். 

பஹீரா திரைப்படத்தின் டீஸரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் டீஸர் வைரலானது. பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்திருக்கும் இந்த படத்தில் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்

ஒவ்வொரு பெண்களையும் கொல்லும் சைக்கோ வேடத்தில் நடித்துள்ளார் பிரபு தேவா. குறிப்பாக டீஸரின் இறுதியில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, உன்னை சிக்க வச்சு கொல்லுரேண்டி மயிலே என்று வசனம் பேசி கொலை செய்யும் காட்சி பலே. கணேசன் சேகர் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அபிநந்தன், இசையமைப்பாளராக கணேசன் சேகர், எடிட்டராக ரூபன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே 50% படப்பிடிப்பை முடித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். ஆனால் அதன் பிறகு கொரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் பணிகள் அனைத்தும் நின்றுபோனது.

bharathi kannamma serial actor akilan completes dubbing for bagheera