விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.விஜய் டிவியின் நம்பர் 1 தொடராக இந்த தொடர் இருக்கிறது.அருண் மற்றும் வினுஷா தேவி இந்த தொடரின் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.ரூபாஸ்ரீ,பரினா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடரில் நடித்து வந்த சில முன்னணி நட்சத்திரங்கள் மாற்றப்பட்டது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சமீபத்தில் கூட இந்த தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்த கண்மணி மனோகரன் இந்த தொடரில் இருந்து விலகினார்.

700 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடரில் அவ்வப்போது சில மாற்றங்கள் சில காரணங்களால் நடைபெற்று வருகிறது.விலகிய கண்மணிக்கு பதிலாக எந்த நடிகை இணையப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

தற்போது புது அஞ்சலியாக யார் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் அருள்ஜோதி ஆரோக்கியராஜ் புது அஞ்சலியாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.