சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் ஃபேவரட் கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சீயான் விக்ரம் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பால் மக்களின் இதயங்களை கொள்ளை அடித்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் முதல் முறையாக இணைந்துள்ள சீயான் விக்ரம் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வருகிறார்.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சீயான் விக்ரம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்திலும் பலவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த 2 திரைப்படங்களின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளிவர உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் மகான் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படத்தில் சிம்ரன்,வாணி போஜன், பாபி சிம்ஹா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள மகான் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக வெளிவந்த மகான் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மகான் படத்தில் இருந்து மிஸ்ஸிங் மீ பாடல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் துருவ் விக்ரம் பாடியுள்ள மிஸ்ஸிங் மீ பாடலின் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசத்தலான அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கை காணுங்கள்.