இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்த பிரமாண்ட படம் தயாராகி வருகிறது #RC15. தெலுங்கில் தயாராகி வரும் இத்திரைப்படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார் இதனையடுத்து பாலிவுட்டில் அன்னியன் ரீமேக் மற்றும் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் ஷங்கர் இயக்கத்தில் தயாராக இருக்கின்றன.

முன்னதாக இயக்குனர் ஷங்கரின் மகள் அத்தை சங்கர் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். தனது முதல் படமாக நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதிதி ஷங்கர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விரும்பும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகையாக இருந்த அதிதி ஷங்கர் தற்போது தெலுங்கு திரையுலகில் பாடகியாகவும் களமிறங்கியுள்ள திரைப்படம் கானி.

இயக்குனர் கிரண் கொரப்படி இயக்கத்தில் நடிகர் வருண் தேஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் கானி படத்திற்கு இசையமைப்பாளர் தமன்.S இசையமைத்துள்ளார்.  கானி திரைப்படத்தில் தமன் இசையில் நடிகை அதிதி ஷங்கர் ரோமியோ ஜூலியட் என்னும் ரொமான்டிக்கான பாடியுள்ளார். சற்று முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அந்தப் பாடல் இதோ...