உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி தற்போது நடிகை & பாடகி என இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி மொழிகள் அனைத்திலும் கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.  

கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் அடுத்ததாக இந்திய சினிமாவின் சூப்பர் ஹிட் திரைப்படமாக கொண்டாடப்பட்ட கன்னட திரைப்படமான கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் சலார் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து வெப்சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள வெப்சீரிஸ் பெஸ்ட் செல்லர். நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி ரிலீஸாகவுள்ள பெஸ்ட் செல்லர் வெப் சீரிஸை அல்தே குஷல் மற்றும் அனிதா தட் இணைந்து எழுத முகுல் அபியங்கர் இயக்கியுள்ளார்.

பெஸ்ட் செல்லர் வெப் சீரிஸில் நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிகர்கள் மிதுன் சக்கரபோர்த்தி, அர்ஜன் பஜ்வா, கௌஹர் கான், சோனாலி குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பெஸ்ட் செல்லர் வெப்சீரிஸ் ட்ரைலர் தற்போது வெளியானது. பலரது கவனத்தை ஈர்த்துள்ள அந்த ட்ரைலர் இதோ…