பாரதி கண்ணம்மாவில் அடுத்து...வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ !
By Aravind Selvam | Galatta | October 20, 2020 14:37 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் நாயகனாக நடித்து வரும் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.
ரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டு பழைய எபிசொட்கள் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த தொடரின் முன்னணி நாயகர்களுக்கென்று சமூகவலைத்தளங்களில் நிறைய ரசிகர் பக்கங்கள்,போட்டோ எடிட்கள்,வீடியோ எடிட்க்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாரதி கண்ணம்மா குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து இந்த தொடரின் ஷூட்டிங் கடந்த 8ஆம் தேதி தொடங்கியது.இந்த தொடரின் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு ஜூலை 27ஆம் தேதி முதல் தொடங்கியது.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாகி வருகிறது.தொடரின் புதிய எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
விறுவிறுப்பான கட்டத்தில் நகர்ந்து வரும் இந்த தொடர் கடந்த வார TRP-யில் சாதனை படைத்தது .அதிகம் பார்க்கப்பட்ட தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரை வைத்து குறிப்பாக கண்ணம்மா நடப்பது செம வைரலாக இருந்தது.இந்நிலையில் தற்போது இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை பரினா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.அடுத்து வரும் கண்ணம்மாவின் பிரசவம் குறித்த ஒரு முக்கிய காட்சியை இவர் பதிவிட்டுள்ளார் ,அதில் கண்ணம்மாவிற்கு இவர் பிரசவம் பார்ப்பது போலே உள்ள ட்விஸ்ட்டையும் தெரிவித்துள்ளார்.
Housemates attempt to trigger Rio | latest Bigg Boss promo | Suresh Chakravarthy
20/10/2020 03:14 PM
Law college student shocked after her teen movie scenes appear on adult websites
20/10/2020 02:38 PM
STR to make a strong comeback on October 22 - Trending Promo Video here!
20/10/2020 01:21 PM