கமல் சார் மாதிரி ஆகணும்னு ஆசை... கதாநாயகனாக கண்ட கனவுகள் குறித்து மனம் திறந்த பப்லு ப்ரித்வி ராஜ்! வீடியோ உள்ளே

கதாநாயகனாகும் கனவுகள் குறித்து மனம் திறந்த பப்லு ப்ரித்வி ராஜ்,babloo prithviraj opens about his career as hero | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராகவும் திகழும் நடிகர் பப்லு ப்ரித்வி ராஜ் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ப்ரித்வி ராஜ் நடித்துள்ளார்இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் அழகன் & வானமே எல்லை, இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்த புதிய மன்னர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பப்லு ப்ரித்வி ராஜ் இயக்குனர் ராஜ்கபூர் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான அவள் வருவாளா திரைப்படத்தில் வித்தியாசமான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார். தொடர்ந்து பிரபுதேவாவின் டைம், இயக்குனர் ராதா மோகனின் பயணம், சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் மிக முக்கிய வேடங்களில் பப்லு ப்ரித்வி ராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளித் திரையில் மட்டுமல்லாது சின்ன திரையிலும் அசத்திய நடிகர் பப்லு ப்ரித்வி ராஜ் பல சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் எல்லாம் மக்களின் மனதை கவர்ந்தார். மேலும் பல முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் மிக முக்கிய வேடங்களிலும் ப்ரித்வி ராஜ் நடித்துள்ளார். மர்ம தேசம், பிரேமி தொடங்கி ரமணி vs ரமணி, ராஜராஜேஸ்வரி, அரசி, அலைபாயுதே, கோகுலத்தில் சீதை, வாணி ராணி, அன்பே வா, கண்ணான கண்ணே உள்ளிட்ட பல மெகா சீரியல்களில் ப்ரித்வி ராஜ்  நடித்துள்ளார். கடைசியாக தெலுங்கில் ஊர்வசிவோ ராக்ஷஷிவோ படத்தில் மிக முக்கிய வேடத்தில் பப்லு ப்ரித்வி ராஜ் நடித்திருந்தார். இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பப்லு ப்ரித்வி ராஜ்  தனது திரைப்பயண அனுபவங்கள் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் எப்போதாவது ஹீரோவாக முடியவில்லை என வருந்தியது உண்டா? எனக் கேட்ட போது, “இளம் நடிகராக ஆரம்ப கட்டத்தில் ரஜினி சாரை ரொம்ப பிடிக்கும் ஆனால் கமல் சார் மாதிரி ஆகணும் என ஆசை... ஒரு நல்ல நடிகராக இருக்க வேண்டும் என நினைத்தேன். அப்படி தெலுங்கில்  நான்கு திரைப்படங்களில் நடித்தேன். நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஃப்ளாப். அந்த தயாரிப்பாளர் என்னிடம் வந்து உங்களை நம்பி காசு போட்டேனே என சொன்னதும் என்னை நம்பி காசு போட்டிங்களா? எனக் கேட்க உங்களை நம்பி நான் வீட்டை விற்று விட்டேன் சார் என்றார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இனிமேல் நாம் நமக்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் வரும்வரை… நாம் நடிக்கணும், நடிகனாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை நல்ல நடிகன் என்று பெயர் வாங்க வேண்டும். வில்லனாக நடிப்பது எளிது ஹீரோவாக நடிப்பது கடினம். சாதாரணமாக வழக்கமாக செய்யும் கதாபாத்திரங்கள் இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்ய வேண்டும். சினிமாவோ சீரியலோ... இந்த சீரியலுக்கும் அந்த சீரியலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்கள் பண்ண வேண்டும். அதை ஹீரோவாக இருந்தால் பண்ண முடியாது. அந்த மாதிரி வித்தியாசமான கதாபாத்திரங்கள் பண்ண வேண்டும் என்று தான் நான் நினைத்தேன்." என தெரிவித்துள்ளார். பப்லு ப்ரித்வி ராஜின் அந்த முழு பேட்டி இதோ…
 

'ரஜினி சார் LETTER குடுக்கலனா என் மகனுக்கு வாழ்க்கையே இல்ல!'- சூப்பர் ஸ்டாரின் பேருதவி குறித்து பேசிய ராகவா லாரன்ஸின் தாயார்! வைரல் வீடியோ
சினிமா

'ரஜினி சார் LETTER குடுக்கலனா என் மகனுக்கு வாழ்க்கையே இல்ல!'- சூப்பர் ஸ்டாரின் பேருதவி குறித்து பேசிய ராகவா லாரன்ஸின் தாயார்! வைரல் வீடியோ

லால் சலாம்-ஐ தொடர்ந்து தயாராகும் விஷ்ணு விஷாலின் புதிய படம்... 3வது முறை இணையும் வெற்றிக் கூட்டணியின் ஸ்பெஷல் அப்டேட் இதோ!
சினிமா

லால் சலாம்-ஐ தொடர்ந்து தயாராகும் விஷ்ணு விஷாலின் புதிய படம்... 3வது முறை இணையும் வெற்றிக் கூட்டணியின் ஸ்பெஷல் அப்டேட் இதோ!

நீங்க புக் படிச்சீங்களா..? பொன்னியின் செல்வன் 2 பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாஸ் காட்டிய சீயான் விக்ரம்... வைரலாகும் வீடியோ இதோ!
சினிமா

நீங்க புக் படிச்சீங்களா..? பொன்னியின் செல்வன் 2 பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாஸ் காட்டிய சீயான் விக்ரம்... வைரலாகும் வீடியோ இதோ!