அன்பான ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தளித்த சிலம்பரசன்.. வைரலாகும் வீடியோ இதோ..

ரசிகர்களுக்கு விருந்தளித்த சிலம்பரசன் வைரல் வீடியோ இதோ - Silambarasan Special treat to his fans viral video | Galatta

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகனாக கவனம் பெற்றவர் நடிகர் சிம்பு. அயராமல் உழைத்து பன்முக திறமைகளை தமிழ் திரையுலகில் வெளிப்படுத்தி தன்னை சிறந்த கலைஞராக தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தினார். மாஸ் படங்களாக இருந்தாலும் குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக இருந்தாலும் இளைஞர்களை ஆர்பரிக்க வைக்கும் அட்டகாசமான கதைக்களம் படமாக இருந்தாலும் அதில் நடிகர் சிம்பு தனித்து தெரியுமளவு வளர்ந்தார். அதன்படி தமிழில் முன்னணி நடிகராய் வளர்ந்த சிம்புவிற்கு தமிழில் தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இடையே ஏற்பட்ட சறுக்கல்களால் பட வாய்புகள் குறைய, தனிப்பட்ட வாழ்வியல் சிக்கலில் அகப்பட சிம்பு சில காலம் தமிழ் சினிமாவில் தோன்றாமல் இருந்தார். இருந்தாலும் அவரது ரசிகர்கள் எந்த சூழ்நிலையிலும் அவரை கை விடாமல் காத்திருந்தனர்.

பின் சிம்பு தனது குறைகளை திருத்தி கொண்டும் தனது உருவத்தை வருத்தி மெருகேற்றி மீண்டும் அனைவரையும் ஆச்சர்யம் அளிக்கும்படி ரீ என்ட்ரி கொடுத்தார். தனது இரண்டாவது இன்னிங்க்ஸ் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் உடன் தொடங்கினார் சிம்பு அதன்படி மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமரசன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அவர் கமல் ஹாசன் தயாரிப்பில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் தனது ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பது வழக்கமாக வைத்திருப்பார். சில ஆண்டுகளாக அந்த நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் ரசிகர்களுடனான சந்திப்பை ஏற்பாடு செய்தார் சிலம்பரசன். அதன்படி  சிலம்பரசன் ரசிகர் மன்றங்களை சேர்ந்த நிர்வாகிகளை மட்டும் நேரில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டார். அதன்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிலம்பரசன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு சிலம்பரசன் சார்பில் விடுக்கப்பட்டது.இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிலம்பரசன் அவர்களுடன் உரையாடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

saif ali khan joins with jrntr in ntr30 movie koratala siva

சந்திப்பு வருகை தந்த அனைவருக்கும் மதிய விருந்தாக பிரியாணி வழங்கப்பட்டது. இதில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்குமளவு நடிகர் சிலம்பரசன் அவர்கள் விருந்து நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து தன் கையால் தனது ரசிகர்களுக்கு விருந்து உபசரித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இது தொடர்பாக வெளியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

 

 

மயக்கும் பொழுதே.. சாகுந்தலம் பட பாடலின் வீடியோ வெளியானது.. உற்சாகத்தில் சமந்தா ரசிகர்கள் - வீடியோ இதோ..
சினிமா

மயக்கும் பொழுதே.. சாகுந்தலம் பட பாடலின் வீடியோ வெளியானது.. உற்சாகத்தில் சமந்தா ரசிகர்கள் - வீடியோ இதோ..

சென்னை முதல் மும்பை வரை.. தொடங்கும் சோழர்களின் பயணம்.. – பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

சென்னை முதல் மும்பை வரை.. தொடங்கும் சோழர்களின் பயணம்.. – பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ இதோ..

இறுதிச்சுற்று கூட்டணி.. மாதவனுக்கு அட்டகாசமாக விருந்தளித்த சுதா கொங்கரா.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

இறுதிச்சுற்று கூட்டணி.. மாதவனுக்கு அட்டகாசமாக விருந்தளித்த சுதா கொங்கரா.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..