ஒரே நாளில் 4 படங்களின் அதிரடி அறிவிப்புகள்... சித்தார்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை இதோ!

ஒரே நாளில் வெளியான 4 படங்களின் அறிவிப்புகள் பற்றி சித்தார்த் அறிக்கை,siddarth important statement about his next 4 movies | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராகவும் இந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் திகழும் நடிகர் சித்தார்த் நேற்று ஏப்ரல் 17ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாளை மேலும் சிறப்பாக்கும் வகையில் நடிகர் சித்தார்த் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களின் அதிரடியான அறிவிப்புகள் நேற்று வெளியாகின முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய இடத்தில் நடிக்கும் சித்தார்த், Y Not ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்கும் டெஸ்ட் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் மாதவன் மற்றும் நயன்தாராவோடு இணைந்து நடிக்கிறார். இதுபோக சித்தா எனும் திரைப்படமும் சித்தார்த் நடிப்பில் தயாராகி வருகிறது. முன்னதாக சித்தார்த் நடித்துள்ள ரொமான்டிக் ஆக்சன் படமான டக்கர் திரைப்படம் வருகிற மே 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் தனது பிறந்தநாளில் வெளிவந்த தனது அடுத்த நான்கு திரைப்படங்களின் முக்கிய அறிவிப்புகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்

அன்புள்ள நண்பர்கள், நலன் விரும்பிகள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு, 
நேற்று என் பிறந்தநாளன்று உங்கள் அனைவரிடம் இருந்து வந்த அனைத்து வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்கள் அனைவரது அன்பாலும் எனக்கு இந்த நாள் ஸ்பெஷலானதாக அமைந்தது. மேலும். என் தொழில் ரீதியாகவும் இது சிறந்த நாளாக அமைந்தது. பிறந்தநாளான்று வெளியான என்னுடைய படங்களின் அறிவிப்புகள் எனக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்று இரவு பகலாக உழைத்து வரக்கூடிய இந்தப் படக்குவினருக்கு நன்றி. 

என் கரியரில் அடுத்த வருடம் சிறந்த நான்கு படங்களை கைவசம் வைத்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கார்த்திக்.ஜி.கிரிஷின் 'டக்கர்' படம்தான் என்னுடைய முதல் வெளியீடு. படத்தின் முதல் பார்வை மற்றும் க்ளிம்ப்ஸ் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது மற்றும் இந்த ஆக்ஷன் படம் மே 26 அன்று வெளியாகிறது. 

Etaki Entertainment பேனரில் S.U. அருண்குமார் இயக்கத்தில் நான் நடித்து வரும் 'சித்தா' படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டிலை வெளியிட்ட மிகச்சிறந்த இந்திய நடிகரான கமல்ஹாசன் சாருக்கு என்னுடைய அன்பும் நன்றியும். இந்த படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் உள்ளது. விரைவில் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இயக்குநர் ஷங்கர் சாரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'இந்தியன்2' படத்தில் என்னுடைய குருவான கமல்ஹாசன் சாருடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை மற்றும் இருபது வருடங்களுக்கு முன்னால் 'பாய்ஸ்' படத்தின் மூலம் எனக்கு உலகை காட்டிய இயக்குநர் ஷங்கர் சார் என்னுடைய செகண்ட் இன்னிங்ஸை இந்தப் படத்தின் மூலம் தொடங்கி வைக்கிறார் என்பதை ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். 

என்னுடைய நண்பரான Y Not Studios தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து வருகிறேன். இந்த அற்புதமான படத்தில் ஆர். மாதவன் மற்றும் நயன்தாராவுடன் நடிக்கிறேன். இந்தப் படத்தில் முற்றிலும் புதிதான ஒரு விஷயத்தை முயற்சி செய்திருக்கிறோம்.

உங்களுடைய நேரத்தை ஒத்துக்கி என் மேல் நம்பிக்கை வைத்ததற்கும், என் திறமையில் முதலீடு செய்ததற்கும், கடின உழைப்பின் மூலம் என்னை ஈர்த்தவர்களுக்கும், சிறந்த ஃபிலிம் மேக்கராகவும் மனிதனாகவும் என்னை மாற்றி வரும் அனைவருக்கும் நன்றி.
அன்புடன்,
சித்தார்த்

 
என தெரிவித்துள்ளார். 
 

லால் சலாம்-ஐ தொடர்ந்து தயாராகும் விஷ்ணு விஷாலின் புதிய படம்... 3வது முறை இணையும் வெற்றிக் கூட்டணியின் ஸ்பெஷல் அப்டேட் இதோ!
சினிமா

லால் சலாம்-ஐ தொடர்ந்து தயாராகும் விஷ்ணு விஷாலின் புதிய படம்... 3வது முறை இணையும் வெற்றிக் கூட்டணியின் ஸ்பெஷல் அப்டேட் இதோ!

நீங்க புக் படிச்சீங்களா..? பொன்னியின் செல்வன் 2 பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாஸ் காட்டிய சீயான் விக்ரம்... வைரலாகும் வீடியோ இதோ!
சினிமா

நீங்க புக் படிச்சீங்களா..? பொன்னியின் செல்வன் 2 பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாஸ் காட்டிய சீயான் விக்ரம்... வைரலாகும் வீடியோ இதோ!

ஹாரிஸ் ஜெயராஜ் உடன் முதல் சந்திப்பு முதல் பாடல் குறித்து அட்டகாசமாக பாடி பதிலளித்த சுமார் ஹாரிஸ்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

ஹாரிஸ் ஜெயராஜ் உடன் முதல் சந்திப்பு முதல் பாடல் குறித்து அட்டகாசமாக பாடி பதிலளித்த சுமார் ஹாரிஸ்! ட்ரெண்டிங் வீடியோ