நீங்க புக் படிச்சீங்களா..? பொன்னியின் செல்வன் 2 பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாஸ் காட்டிய சீயான் விக்ரம்... வைரலாகும் வீடியோ இதோ!

பொன்னியின் செல்வன் 2 பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாஸ் காட்டிய சீயான் விக்ரம்,chiyaan vikram mass reply in ponniyin selvan 2 press meet | Galatta

முதல் பாகத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புத நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பிரம்மாண்ட படைப்பை தயாரித்துள்ளன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனிடையே தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், படம் குறித்த பல கேள்விகளுக்கு படக்குழுவினர் சுவாரசியமாக பதில் அளித்தனர். அந்த வகையில், “பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் அருள்மொழி வர்மனுக்கு என்ன ஆயிற்று என்பது போல கதையை முடித்திருப்பீர்கள்... நாவலை படிக்காதவர்களுக்கு அது ஒரு எதிர்பார்ப்பாகவே இருந்திருக்கும் அருள்மொழி வர்மனுக்கு என்ன ஆயிருக்கும் என எல்லாம் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இப்போது இரண்டாம் பாகத்தில் ட்ரெய்லரில் அருள்மொழிவர்மன் இருக்கிறார் என்பது போல காட்டி இருப்பீர்கள் இது எதிர்பார்ப்புகளை குறைக்காதா? என நிருபர் ஒருவர் கேட்ட போது, “குறைந்துவிட்டது என நீங்கள் நினைக்கிறீர்களா?” என மணிரத்னம் கேட்டார். தொடர்ந்து நிருபர், “குறைப்பதற்கான காரணங்கள் இருக்கிறது அல்லவா.. நாவலை படித்தவர்களுக்கு தெரியும் படிக்காதவர்களுக்கு அது பற்றிய பேச்சுகள் எல்லாம் போனது எனவே ட்ரெய்லரில் அவர் இருக்கிறார் என்பது ஒரு எதிர்பார்ப்பை குறைக்க வாய்ப்பு இருக்கும் அல்லவா சார்?” எனக் கேட்க, அவருக்கு தரமான பதிலை வழங்க மைக்கை எடுத்த சீயான் விக்ரம், “கொஞ்சம் யோசித்து பாருங்கள் ட்ரெய்லரில் ஜெயம் ரவி இல்லை என்றால் என்ன கேள்வி கேட்டு இருப்பீர்கள் இவர்கள் எல்லாரையும் வைத்துவிட்டு அவரை மட்டும் வைக்கவில்லை டைட்டிலை பொன்னியின் செல்வன் என வைத்துவிட்டு அவர் இல்லையே என கேட்டு இருப்பீர்களா கேட்க மாட்டீர்களா? நீங்கள் முதலில் நாவலை படித்தீர்களா படிக்கவில்லையா எனக் கேட்க, பதிலுக்கு ஜெயம் ரவி ஒருபுறம், “இதற்கு நான் பதில் சொல்கிறேன் நான் வருவது ஒருவேளை பிளாஷ்பேக் ஆக கூட இருக்கலாம்” என சொல்ல விழா மேடை கலகலப்பானது. தொடர்ந்து சீயான் விக்ரம், “நீங்கள் INCEPTION படம் பார்த்தீர்களா அதில் எது பிளாஷ்பேக் என்றே தெரியாது” என பதில் அளிக்க, மறுபுறம் நடிகர் கார்த்தி, “அதைவிட கதையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன அதை வெளிப்படுத்தும் போது படம் சூப்பர் ஹிட் ஆகும் பயப்படவே வேண்டாம்” என பதிலளித்தார். சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த பொன்னியின் செல்வன் 2 பட குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வீடியோ இதோ…
 

'அஜித் சொல்லி ஷாலினி கேட்ட SORRY!'- இதுவரை வெளிவராத நினைவுகளை பகிர்ந்து கொண்ட பப்லு ப்ரித்வி ராஜ்! வைரல் வீடியோ இதோ
சினிமா

'அஜித் சொல்லி ஷாலினி கேட்ட SORRY!'- இதுவரை வெளிவராத நினைவுகளை பகிர்ந்து கொண்ட பப்லு ப்ரித்வி ராஜ்! வைரல் வீடியோ இதோ

சீயான் விக்ரமின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த துருவ நட்சத்திரம் படக்குழு… அட்டகாசமான புது GLIMPSE இதோ!
சினிமா

சீயான் விக்ரமின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த துருவ நட்சத்திரம் படக்குழு… அட்டகாசமான புது GLIMPSE இதோ!

சினிமா

"லோகேஷ் ப்ரோ & உங்கள் தளபதி..!"- பொன்னியின் செல்வன் 2 மேடையில் லியோ அப்டேட் கொடுத்த த்ரிஷா... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!