உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்... பிரம்மாண்டமான இந்தியன் 2 பட அட்டகாசமான அப்டேட் இதோ!

ஷங்கர்-கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்த புது தகவல்,shankar shared shooting update of kamal haasan indian 2 movie | Galatta

என்றும் தீரா கலை தாகத்தோடு 60 ஆண்டுகளுக்கும் மேலாக குறையா வேகத்தோடு ஒட்டு மொத்த இந்திய திரையுலகிற்கும் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விக்ரம். தனது தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக தயாராகும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மிக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தனது 234 ஆவது திரைப்படமான KH234 படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்த மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் கமல் ஹாசன் திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறார். 

முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் திரைப்படம் கமல்ஹாசன் அவர்களுக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற விபத்தின் காரணமாக தடைபட்டது. பின்னர் தடைகளை அத்தனையும் நீங்கிய பிறகு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். 

கடந்த மார்ச் மாதம் முதல் தென்னாபிரிக்கா மற்றும் தைவான் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வெகு விரைவில் நிறைவடையும் நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது தைவான் மற்றும் தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் கைகுலுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “இப்படி ஒரு POWER PACKED படப்பிடிப்பிற்கு நன்றி கமல்ஹாசன் சார் மீண்டும் உங்களை மே மாதம் சந்திக்கிறேன். இந்தியன் 2-வில் இருந்து கேம் சேஞ்சருக்கு க்ளைமேக்ஸுக்காக நகர்கிறேன்.” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அந்த பதிவு இதோ…

 

Thank you for this power-packed Schedule @ikamalhaasan sir 🔥 See you again in May! Will be moving from #Indian2Gamechanger for the climax!!! pic.twitter.com/J7WGmzCuxb

— Shankar Shanmugham (@shankarshanmugh) April 18, 2023

நீங்க புக் படிச்சீங்களா..? பொன்னியின் செல்வன் 2 பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாஸ் காட்டிய சீயான் விக்ரம்... வைரலாகும் வீடியோ இதோ!
சினிமா

நீங்க புக் படிச்சீங்களா..? பொன்னியின் செல்வன் 2 பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாஸ் காட்டிய சீயான் விக்ரம்... வைரலாகும் வீடியோ இதோ!

ஹாரிஸ் ஜெயராஜ் உடன் முதல் சந்திப்பு முதல் பாடல் குறித்து அட்டகாசமாக பாடி பதிலளித்த சுமார் ஹாரிஸ்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

ஹாரிஸ் ஜெயராஜ் உடன் முதல் சந்திப்பு முதல் பாடல் குறித்து அட்டகாசமாக பாடி பதிலளித்த சுமார் ஹாரிஸ்! ட்ரெண்டிங் வீடியோ

சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2, காஞ்சனா 4 படங்கள் குறித்து பக்கா மாஸ் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்! விவரம் உள்ளே
சினிமா

சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2, காஞ்சனா 4 படங்கள் குறித்து பக்கா மாஸ் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்! விவரம் உள்ளே