குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ப்ரித்வி ராஜ் தொலைக்காட்சிகளிலும் பல அட்டகாசமான நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழில், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் அழகன் & வானமே எல்லை, இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்த புதிய மன்னர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பப்லு ப்ரித்வி ராஜ் இயக்குனர் ராஜ்கபூர் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான அவள் வருவாளா திரைப்படத்தில் வித்தியாசமான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார். தொடர்ந்து பிரபுதேவாவின் டைம், இயக்குனர் ராதா மோகனின் பயணம், சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் மிக முக்கிய வேடங்களில் பப்லு ப்ரித்வி ராஜ் நடித்துள்ளார். கடைசியாக தெலுங்கில் ஊர்வசிவோ ராக்ஷஷிவோ படத்தில் மிக முக்கிய வேடத்தில் பப்லு ப்ரித்வி ராஜ் நடித்திருந்தார்.
மேலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் அசத்தி வரும் பப்லு ப்ரித்வி ராஜ் தமிழில் மர்ம தேசம், பிரேமி தொடங்கி ரமணி vs ரமணி, ராஜராஜேஸ்வரி, அரசி, அலைபாயுதே, கோகுலத்தில் சீதை, வாணி ராணி, அன்பே வா, கண்ணான கண்ணே உள்ளிட்ட பல மெகா சீரியல்களில் ப்ரித்வி ராஜ் நடித்துள்ளார். இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பப்லு ப்ரித்வி ராஜ் தனது திரைப்பயண அனுபவங்கள் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் தான் நடித்த போது அங்கிருந்து நட்சத்திர நடிகர்களால் தனது காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து பேசிக் கொண்டிருந்த ப்ரித்வி ராஜ் அவர்களிடம் தமிழ் சினிமாவில் இதுபோன்று இருந்ததா? என கேட்டபோது, “தமிழில் நான் நடித்த ஹீரோக்கள் எல்லோரும் மிகவும் இனிமையானவர்கள். அஜித் குமார் ஒரு ஜென்டில்மேன். அவர் எப்போதும் அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். நான் இப்போது நன்றாக நடிக்கிறேன் என்றால் வந்து நின்று பார்த்து ரொம்ப நன்றாக நடிக்கிறீர்கள் சார் ஏன் சொல்லி பாராட்டி விட்டுப் போகக் கூடியவர்.“ என்றார்.
தொடர்ந்து நீங்கள் பார்த்ததிலேயே அஜித்குமார் சார் இந்த விஷயத்தில் மிக சிறந்தவர் என சொல்ல வேண்டுமென்றால் எதை சொல்வீர்கள்? எனக் கேட்ட போது, “நான் ஒரு ரெஸ்டரண்ட்க்கு சாப்பிட சென்றேன். அங்கே ஷாலினியும் அவரது மகளும் வந்தார்கள். நான் அவர்களைப் பார்த்தேன் எனக்கு அவர்களிடம் பழக்கம் இல்லை. பேசலாமா வேண்டாமா என பார்த்தேன் பின்னர் நான் அமர்ந்து சாப்பிட்டு விட்டேன். இது முதல் தடவை. இரண்டாவது முறையும் அதே போல் வந்தார்கள் எனக்கு முன்னாடி அமர்ந்து இருந்தார்கள். தொடர்ந்து மூன்றாவது முறையும் இதே போல் நடந்தது. அப்போது ஷாலினி அந்த ஹோட்டல் காரர்களிடம் எனது போன் நம்பரை கேட்டு வாங்கி எனக்கு போன் செய்து, “என்னை மன்னித்து விடுங்கள், நான் உங்களுடன் நடித்ததில்லை எனக்கு பழக்கமில்லை நான் வந்து பேசினால் உங்களுக்கு தொந்தரவாக இருக்குமா? என்று நினைத்து தான் நான் வந்து பேசவில்லை. அஜித்திடம் இதை சொன்னேன் அவர் மிகவும் வருத்தப்பட்டார். அப்படி செய்யாதே இது தவறு… என்ன இருந்தாலும் அவர் சீனியர். பேசு அவரிடம் மன்னிப்பு கேள்” என சொல்லி ஷாலினி என்னிடம் மன்னிப்பு கேட்டார் இதெல்லாம் அவசியமற்றது தானே.. அவர்கள் கண்டுக் கொள்ளாமல் போய் இருக்கலாம். அஜித் என்னுடைய தங்கை உடன் படித்தவர். எங்கு பார்த்தாலும் “சோஃபியா எப்படி இருக்கிறார்?” என கேட்பார். அவருடைய பர்சனல் நம்பரை அவளிடம் கொடுத்து எப்போது வேண்டுமானாலும் என்ன பிரச்சனை இருந்தாலும் எனக்கு ஒரு போன் செய் என கொடுத்திருக்கிறார். இந்த மாதிரி குட்டி குட்டி விஷயங்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்து வராது போலியாக இல்லை நிஜமாகவே அவர் ஒரு ஜென்டில்மேன்.” என ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார் ப்ரித்விராஜின் அந்த முழு பேட்டி இதோ…