சீயான் விக்ரமின் மிரட்டலான பிறந்தநாள் பரிசு... அதிரடியான தங்கலான் படத்தின் மிரள வைக்கும் புது GLIMPSE இதோ!

சீயான் விக்ரமின் தங்கலான் பட புது GLIMPSE,chiyaan vikram special birthday gift thangalaan movie glimpse | Galatta

நடிப்பின் அசுரன் என சொல்லும் அளவிற்கு தொடர்ச்சியாக படத்திற்கு படம் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த நடிகர் சீயான் விக்ரம் இன்று ஏப்ரல் 17-ஆம் தேதி தனது 57 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல கோடி ரசிகர்களும் முன்னணி நட்சத்திரங்களும் பிரபலங்களும் சீயான் விக்ரமின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை சீயான் விகர்ம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது. கடைசியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனிடம் கதாபாத்திரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சீயான் விக்ரம் அதன் இரண்டாவது பாகமாக வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் அனைவரையும் தனது நடிப்பால் மிரள வைக்க இருக்கிறார்.

அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். கடைசியாக தனது சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அடுத்த தங்கலான் திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். அடுத்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமாக தயாராகும் சார்பட்டா ரவுண்ட் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. மேலும் இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில்  நடிக்கின்றனர். 

1800-களின் காலகட்டத்தில் நடைபெறும் பீரியட் திரைப்படமாக கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் தங்கலான் திரைப்படத்தை தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக ரிலீசாக உள்ள தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான OTT ரிலீஸ் உரிமையை NETFLIX நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரமின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் ஸ்பெஷல் பரிசாக தங்கலான் திரைப்படத்தின் அதிரடியான மேக்கிங் மற்றும் மிரட்டலான முன்னோட்ட காட்சி இணைந்த அட்டகாசமான ஒரு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வழக்கம்போல் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான ஒரு மிரள வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் அந்த ஸ்பெஷல் வீடியோ இதோ…
 

சினிமா

"தளபதி விஜய் உடன் இணைவது எப்போது?"- இயக்குனர் விக்னேஷ் சிவனின் சுவாரஸ்யமான பதில்! ட்ரெண்டிங் வீடியோ

சூர்யா - சிவா கூட்டணியின் பிரம்மாண்ட படைப்பான சூர்யா42 பட டைட்டில் வெளியீடு... மிரட்டலான புது GLIMPSE இதோ!
சினிமா

சூர்யா - சிவா கூட்டணியின் பிரம்மாண்ட படைப்பான சூர்யா42 பட டைட்டில் வெளியீடு... மிரட்டலான புது GLIMPSE இதோ!

தானா சேர்ந்த கூட்டம் பிளாக்பஸ்டர் கிடையாது... ஆனாலும் சூர்யா சார் கொடுத்த பரிசு!- மனம் திறந்த விக்னேஷ் சிவனின் சிறப்பு பேட்டி
சினிமா

தானா சேர்ந்த கூட்டம் பிளாக்பஸ்டர் கிடையாது... ஆனாலும் சூர்யா சார் கொடுத்த பரிசு!- மனம் திறந்த விக்னேஷ் சிவனின் சிறப்பு பேட்டி