சீயான் விக்ரமின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த துருவ நட்சத்திரம் படக்குழு… அட்டகாசமான புது GLIMPSE இதோ!

துருவ நட்சத்திரம் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் GLIMPSE,chiyaan vikram in dhruva natchathiram movie new poster | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த ஹீரோவாகவும் மிகச் சிறந்த நடிகராகவும் திகழும் சீயான் விக்ரம் இன்று காலை 57வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். அவருக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என ரசிகர்களுக்கு ஹேட்ரிக் விருந்து வைத்தார் விக்ரம். குறிப்பாக இயக்குனர் மணிரத்னம் தனது கனவு படமாக இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்த சீயான் விக்ரம் அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்தார். பொன்னியின் செல்வன் பாகம் 1 வெற்றியை தொடர்ந்து, வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் மிரட்டும் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. 

அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். 1800-களின் காலகட்டத்தில் நடைபெறும் பீரியட் திரைப்படமாக கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராஏகும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த திரைப்படம் துருவ நட்சத்திரம். பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு நின்ற துருவ நட்சத்திரம் திரைப்படத்தை, கடந்த ஆண்டு(2022) தனது இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விரைவில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார். 

ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பிறந்தநாள் கொண்டாடும் சீயான் விக்ரம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…

 

Wishing @chiyaan a very Happy Birthday!#DhruvaNatchathiram @Jharrisjayaraj @OndragaEnt @oruoorileoru @manojdft @srkathiir @the_kochikaran @editoranthony @riturv @realradikaa @SimranbaggaOffc @rparthiepan @DhivyaDharshini @rajeevan69 @Kumar_gangappan @Kavithamarai @utharamenon5 pic.twitter.com/TmfW15RxCe

— Gauthamvasudevmenon (@menongautham) April 17, 2023

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்... ரசிகர்களை உற்சாகப்படுத்திய அட்டகாசமான தகவல்! வீடியோ உள்ளே
சினிமா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்... ரசிகர்களை உற்சாகப்படுத்திய அட்டகாசமான தகவல்! வீடியோ உள்ளே

'நான் வேணா வில்லனா நடிக்கட்டுமா?'- விக்னேஷ் சிவனிடம் கேட்ட விஜய் சேதுபதி... என்ன படம் தெரியுமா? வைரல் வீடியோ இதோ
சினிமா

'நான் வேணா வில்லனா நடிக்கட்டுமா?'- விக்னேஷ் சிவனிடம் கேட்ட விஜய் சேதுபதி... என்ன படம் தெரியுமா? வைரல் வீடியோ இதோ

சினிமா

"தளபதி விஜய் உடன் இணைவது எப்போது?"- இயக்குனர் விக்னேஷ் சிவனின் சுவாரஸ்யமான பதில்! ட்ரெண்டிங் வீடியோ