"லோகேஷ் ப்ரோ & உங்கள் தளபதி..!"- பொன்னியின் செல்வன் 2 மேடையில் லியோ அப்டேட் கொடுத்த த்ரிஷா... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!

பொன்னியின் செல்வன் 2 மேடையில் லியோ அப்டேட் கொடுத்த த்ரிஷா,trisha speaks about leo in ponniyin selvan 2 promotion | Galatta

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகியாக திகழும் நடிகை திரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ராங்கி. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் கதை - திரைக்கதையில் இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் வெளிவந்த ராங்கி திரைப்படம் ஆக்சன் திரில்லர் படமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்து ஆல் டைம் ரெகார்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களை திரிஷா கொள்ளையடித்தார். தொடர்ந்து தி ரோட் எனும் அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்த வரும் த்ரிஷா மலையாளத்தில் மோகன்லால் உடன் இணைந்து ராம் பார்ட் 1 திரைப்படத்திலும் நடித்த வருகிறார்.  

மேலும் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் தளபதி விஜயின் 67வது திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்திலும் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.ஏ மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் இணைந்துள்ள லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு சமீபத்தில் தொடர்ச்சியாக 50 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்து நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. 

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரஹ்மான், கிஷோர், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, அஸ்வின் காக்கமண்ணு, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயச்சித்ரா என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தொடர்ச்சியாக பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நேற்று ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 விழாவில் நடிகர் நடிகைகள் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை திரிஷா பேசிய போது ரசிகர்கள் தங்களது அன்பை ஆரவாரத்தின் மூலம் வெளிப்படுத்தினர். மேலும் திரிஷா பேசிக் கொண்டிருந்தபோது ரசிகர்கள் லியோ லியோ என கூச்சலிட்டனர். அப்போது, “லியோ பற்றி கேட்கிறீர்களா?” என திரிஷா கேட்க இன்னும் ஆரவாரம் அதிகரித்தது. தொடர்ந்து பேசிய த்ரிஷா, “நீங்கள் கேட்டு கொண்டே இருக்கிறீர்கள் இந்தக் கேள்வி... எங்க போனாலும் கேட்க போகிறீர்கள்... லியோ படப்பிடிப்பில் இருந்து தான் வருகிறேன்... அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. லோகேஷ் ப்ரோ மற்றும் உங்கள் தளபதி ரொம்பவே நன்றாக இருக்கிறார்கள். மற்றதை லியோ படத்தின் விழாவில் பேசலாம்." என த்ரிஷா பேசியுள்ளார். திரிஷாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

'நான் வேணா வில்லனா நடிக்கட்டுமா?'- விக்னேஷ் சிவனிடம் கேட்ட விஜய் சேதுபதி... என்ன படம் தெரியுமா? வைரல் வீடியோ இதோ
சினிமா

'நான் வேணா வில்லனா நடிக்கட்டுமா?'- விக்னேஷ் சிவனிடம் கேட்ட விஜய் சேதுபதி... என்ன படம் தெரியுமா? வைரல் வீடியோ இதோ

சினிமா

"தளபதி விஜய் உடன் இணைவது எப்போது?"- இயக்குனர் விக்னேஷ் சிவனின் சுவாரஸ்யமான பதில்! ட்ரெண்டிங் வீடியோ

சூர்யா - சிவா கூட்டணியின் பிரம்மாண்ட படைப்பான சூர்யா42 பட டைட்டில் வெளியீடு... மிரட்டலான புது GLIMPSE இதோ!
சினிமா

சூர்யா - சிவா கூட்டணியின் பிரம்மாண்ட படைப்பான சூர்யா42 பட டைட்டில் வெளியீடு... மிரட்டலான புது GLIMPSE இதோ!