'நான் வேணா வில்லனா நடிக்கட்டுமா?'- விக்னேஷ் சிவனிடம் கேட்ட விஜய் சேதுபதி... என்ன படம் தெரியுமா? வைரல் வீடியோ இதோ

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி,vignesh shivan vijay sethupathi to play villain in thaana serntha kootam | Galatta

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் என வரிசையாக அசத்தலான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவரும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் கேம் சேஞ்சர்ஸ் வித் சுகாசினி மணிரத்னம் சிறப்பு பேட்டியில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோடு இணைந்து பணியாற்றுவது அவருடனான உரையாடல்கள் குறித்து பேசியபோது,

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடிகையும் இயக்குனருமான சுகாசினி மணிரத்னம் அவர்களோடு கேம் சேஞ்சர்ஸ் வித் சுகாசினி மணிரத்னம் சிறப்பு நேர்காணலில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னோடு பணியாற்றிய ஒவ்வொரு நட்சத்திரங்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார். அந்த வகையில் தனது நானும் ரவுடிதான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி குறித்து பேசிய போது, “அவர் என்னுடைய ஃபேவரட் ஹீரோ! எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் என்னை நீ என் பையன் மாதிரி டா என அப்படித்தான் என்னை நடத்துவார். அவருடனான உரையாடல்களை நான் மிகவும் ரசிப்பேன். நான் சாதாரணமாக கூட அவரிடம் பேசுவேன் எப்போது வேண்டுமானாலும் அவருடன் பேசுவேன் அடிக்கடி சந்திப்பேன். அவர் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி பூத் மாதிரி எப்போது வேண்டுமானாலும் போய் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். நீங்கள் பாருங்கள் என்ன அவருடைய நண்பர்கள் ரசிகர்கள் யார் வந்தாலும் அவர் ஹக் பண்ணுவார். கிஸ் பண்ணுவார். இவை அனைத்தும் சும்மா போலியாக வந்து விடாது. அவர் மிகவும் நேர்மையானவர். அதனால் தான் அவர் மிகவும் வெற்றிகரமான ஒரு இடத்தில் இருக்கிறார். தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போது அவர் என்னிடம் சொன்னார் நான் வில்லனாக வந்து நடிக்கட்டுமா? என சொல்லுடா வந்து பண்ணுகிறேன் என்றெல்லாம் சொன்னார். நான் சொன்னேன் என்னால் உங்களை ஹீரோவா மட்டும்தான் பார்க்க முடியும். என்னால் உங்களை அப்படி பார்க்கவே முடியாது. அவர் எப்போதும் இது மாதிரியான விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பார். இந்த கதாபாத்திரம் என்னால் பண்ண முடியுமா அந்த கதை பாத்திரம் என்னால் பண்ண முடியுமா என்பது போல் தான். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் ரொம்ப கடினமான காட்சிகள் தான். அது சமாளிக்கவே முடியாத ஒரு சூழ்நிலை ஆமாம் உன்னையும் காதலிக்கிறேன் உன்னையும் காதலிக்கிறேன் என பேச வேண்டும். அந்தக் காட்சியை ஒரு சிங்கிள் ஷாட்டாக எடுக்க வேண்டும். டைமிங் சரியாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் கேமரா அதற்கு தகுந்த மாதிரி நகர வேண்டும். அதற்காக பிரத்தியேகமாக எல்லாம் தயார் செய்து கஷ்டப்பட்டு அந்த காட்சியை எடுத்தோம். அதில் அவர் நடித்த விதம் வாய்ப்பே இல்லை. இப்போது வட இந்தியாவிற்கு சென்று ஸ்ரீராம் ராகவன் சாருடைய படங்கள் மற்ற படங்கள் எல்லாம் செய்து பயங்கரமாக மெருகேறி பயங்கரமாக பேசுகிறார். இப்போது அவர் பயங்கர அறிவோடு நிறைய பேசுவது செம்மையாக இருக்கிறது.” என தெரிவித்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்ட கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் நேர்காணலின் முழு பேட்டி இதோ…


 

தானா சேர்ந்த கூட்டம் பிளாக்பஸ்டர் கிடையாது... ஆனாலும் சூர்யா சார் கொடுத்த பரிசு!- மனம் திறந்த விக்னேஷ் சிவனின் சிறப்பு பேட்டி
சினிமா

தானா சேர்ந்த கூட்டம் பிளாக்பஸ்டர் கிடையாது... ஆனாலும் சூர்யா சார் கொடுத்த பரிசு!- மனம் திறந்த விக்னேஷ் சிவனின் சிறப்பு பேட்டி

சினிமா

"சிலம்பரசன்TR உடனான உரையாடல்கள் எப்படி இருக்கும்?"- ரகசியத்தை உடைத்த விக்னேஷ் சிவனின் ஸ்பெஷல் பேட்டி! வீடியோ உள்ளே

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் 16 ஆகஸ்ட் 1947 பட அடுத்த சர்ப்ரைஸ்... கலக்கலான கோட்டிக்கார பயலே வீடியோ பாடல் இதோ!
சினிமா

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் 16 ஆகஸ்ட் 1947 பட அடுத்த சர்ப்ரைஸ்... கலக்கலான கோட்டிக்கார பயலே வீடியோ பாடல் இதோ!