“அவருக்காக அதை பண்ணேன்..” தளபதி விஜய் குறித்து நடிகர் ராகவா லாரான்ஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – Exclusive interview இதோ..

தளபதி விஜய் குறித்து ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்ட தகவல் இதோ Raghava Lawrence about thalapathy vijay | Galatta

தமிழில் முனி, காஞ்சனா 1,2,3 ஆகிய பிளாக் பஸ்டர் படங்களை இயக்கியும் நடித்தும் முன்னனி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டையொட்டி அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ‘ருத்ரன்’ வெளியானது. கதிரேசன் தயாரித்து இயக்கிய இப்படம் தற்போது ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வெற்றிகரமாக பல இடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் இணைந்து கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்க வில்லனாக சரத்குமார் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அவர்கள்  நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் அவரது திரைப்பயணம் குறித்தும் தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில், திருமலை படத்தில் தளபதி விஜயுடன் ஒன்றாக பணியாற்றியது குறித்து பேசிய அவர்,

“துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் மேகமாய் வந்து போகிறேன் பாடல்தான் அவருக்கு முதல் முறை அவருடன் பணியாற்றினேன். அப்பொழுதிலிருந்தே எங்கள் நட்பு தொடர்ந்தது. அதுக்கப்பறம் திருமலை படத்தில் இணைந்தோம்.

தெலுங்கு படங்களில் நான் எவ்ளோ பிஸியாக இருந்தாலும் எனக்கு விஜய் நண்பர் கூப்பிட்டா மட்டும் ஓடி வந்துவிடுவேன். இப்போ திரையில் எதுவும் நடிக்க வேண்டாம் இயக்குனரா போலாம். அப்பறமா ஹீரோவா திரையில் வரலாம்னு முடிவு பண்ண காலம் அது..அப்போதான் திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு கேட்டார்கள், விஜய் சார் கூட ஆடனும் னு கேட்டாங்க.. நான் வேற யாருனா இருந்தா பண்ணிருக்க மாட்டேன். நண்பர் ன்றதால அதை பண்ணேன். எனக்கு அவருடைய அமைதி ரொம்ப பிடிக்கும். அதிகம் பேசமாட்டார். செயல் அதிகமா இருக்கும் வார்த்தை குறைவா இருக்கும். எனக்கு நலத்தொண்டு பணியில் சில உதவிகள் தேவைப்படும் போது எப்போ போன் பண்ணாலும் உடனே அந்த உதவி செய்வார்.நான் வளர்க்கும் என்னுடைய குழந்தைகள் நிறைய பேர் விஜய் சார் படம் வெளியான போது படம் பாக்கனும் னு கேட்பார்கள்‌‌.  நான் விஜய் சாருக்கு அழைத்து இது குறித்து கேட்டேன்.  அவர் அவங்களுக்காக தனியா ஷோ வே போட்றலாம் னு சொன்னார். நம்ம பசங்கறுக்கு எப்போதெல்லாம் ஒரு படம் வெளியாகிறதோ அப்பொதேல்லாம் ஒரு தனியா ஷோ ஏற்பாடு செய்வார்..” என்றார் நடிகர் ராகவா லாரன்ஸ்

மேலும் தளபதி விஜயுடன் எப்போது இணைந்து நடிக்கவிருகிரீர்கள் என்ற கேள்விக்கு, "என் வாழ்க்கையில் நடப்பது எதுவும் நான் திட்டமிடுறது கிடையாது. எல்லாம் கடவுள் பன்றது. விஜய் சாருடன் நடிக்கனும்னு எழுதிருந்து அது நடந்தா.. முதல்ல சந்தோஷப்படுறது  நானாதான் இருப்பேன்." என்றார் ராகவா லாரன்ஸ்

மேலும் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு அட்டகாசமான பல தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ...

இயற்கை தாயின் அன்பு மகன்.. சின்னக்கலைவாணர் விவேக் அவர்கள் கடந்து வந்த பாதை..  – சிறப்பு கட்டுரை இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

இயற்கை தாயின் அன்பு மகன்.. சின்னக்கலைவாணர் விவேக் அவர்கள் கடந்து வந்த பாதை.. – சிறப்பு கட்டுரை இதோ..

மீண்டும் படமாகும் விஜய் சேதுபதி விலகிய முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு – மிரட்டலான First Look இதோ..
சினிமா

மீண்டும் படமாகும் விஜய் சேதுபதி விலகிய முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு – மிரட்டலான First Look இதோ..

சினிமா

"விலகி போனாலும் சில விஷயங்கள் அதை மீறி.." ட்ரோல்களுக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் – Exclusive Interview இதோ..