பிறந்த நாள் வாழ்த்துகளுடன் வெளியானது இந்தியன் 2 சித்தார்த்தின் First Look – அட்டகாசமான போஸ்டர் இதோ...

இந்தியன் 2 படத்தில் அட்டகாசமான லுக்கில் நடிகர் சித்தார்த் விவரம் இதோ - Team indian 2 wishes actor siddharth birthday | Galatta

தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சித்தார்த். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003 ம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். முதல் படத்திலே இளமை துள்ளும் நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் கனவு காதலனாக வலம் வந்தார். தொடர்ந்து தமிழில் ஆய்த எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, உதயம், ஜிகர்தண்டா, காவியதலைவன், சிகப்பு மஞ்சள் பச்சை போன்ற பல முக்கியமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இன்றும் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவர் தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு மொழியில் அறிமுகாமகி நடித்த திரைப்படங்களே சித்தார்த் அவர்களில் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகராக மாற்றியது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராக இருந்து வருகிறார். அதே நேரத்தில் நடிகர் சித்தார்த் இந்தியிலும் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 2019 ல் வெளியான ‘அருவம்’ படமும் தெலுங்கில் 2021 ல் வெளியான ‘மகா சமுத்திரம்’ திரைப்படமும் தான் அவரது கடைசி படங்களாக இருந்தது வழக்கம் போல் சித்தார்த் இடைவெளி விட்டு படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதன்படி தற்போது சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

லைகா தயாரிப்பு நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறார். படப்பிடிப்பை தாய்வான் நாட்டில் முடித்த படக்குழு தற்போது தென் ஆப்ரிக்கா நாடு பகுதிகளில் படமாக்கி கொண்டு வருகின்றனர். இப்படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிரூத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இன்று பிறந்தாநாள் கொண்டாடும் நடிகர் சித்தார்த் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நடிகர் சித்தார்த் அவர்களின் இந்தியன் 2 படத்தின் கதாபத்திர தோற்றத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. அட்டகாசமாக பைக்கில் அமர்ந்தபடி இருக்கும் சித்தார்த் அவர்களின் போஸ்டரை படக்குழு வாழ்த்துகளுடன் வெளியிட்டுள்ளது.

 

Team #INDIAN2 🇮🇳 wishes Mr. Charming & multi talented #Siddharth 🤩 a Happy B'day 🥳 & a fabulous year ahead ✨

🌟 @ikamalhaasan 🎬 @shankarshanmugh 🪙 @LycaProductions @RedGiantMovies_ 🎶 @anirudhofficial 🌟 #Siddharth @MsKajalAggarwal @Rakulpreet @priya_Bshankar #BobbySimha 📽️… pic.twitter.com/VkBQ5SJ3nr

— Lyca Productions (@LycaProductions) April 17, 2023

இதையடுத்து ரசிகர்கள் அந்த போஸ்டரை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.சித்தார்த் அவர்களின் தோற்றம் பத்திரிக்கையாளராக இருக்க கூடும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். அதே நேரத்தில் சட்டையில் இருக்கும் தேசிய கோடி அவரது தேசிய உணர்வை உணர்த்தும் வகையில் இருகின்றது என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் கமல் ஹாசன் தவிர்த்து படக்குழு வெளியிட்டுள்ளமுதல் நடிகரின் முதல் பார்வை இது என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் இந்தியன் 2 திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உலகமெங்கும் வெளியாகவுள்ளது

சினிமா

"விலகி போனாலும் சில விஷயங்கள் அதை மீறி.." ட்ரோல்களுக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் – Exclusive Interview இதோ..

“திரிஷா நடிக்க முடியாம போனதுக்கு இதுதான் காரணம்” விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive interview இதோ..
சினிமா

“திரிஷா நடிக்க முடியாம போனதுக்கு இதுதான் காரணம்” விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive interview இதோ..

“இனிமே ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’  பட்டம் வேண்டாம்” ரசிகர்கள் முன்னிலையில் ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்ட தகவல் - Exclusive interview இதோ..
சினிமா

“இனிமே ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம்” ரசிகர்கள் முன்னிலையில் ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்ட தகவல் - Exclusive interview இதோ..