1978-ல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் அவள் அப்படிதான்.ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,ஸ்ரீப்ரியா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.ருத்ரய்யா  இயக்கியிருந்த இந்த படம் காலத்தை கடந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

Aval Appadithan Remake on Talks STR DQ Shruti

இந்த படம் ரீமேக் செய்யப்படவுள்ளது என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இந்த படத்தை பாணா காத்தாடி,செம போத ஆகாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.

Aval Appadithan Remake on Talks STR DQ Shruti


STR,துல்கர் சல்மான்,ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கவுள்ளனர் என்ற தகவலும் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்து பத்ரி வெங்கடேஷிடம் விசாரித்த போது,படம் குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.ஸ்ருதிஹாசன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றும்.கமல் வேடத்தில் துல்கரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்றும் ரஜினி வேடத்தில் நடிக்க STR மற்றும் விஜய் தேவரகொண்டாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.இந்த படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர்களிடம் வாங்கிவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Aval Appadithan Remake on Talks STR DQ Shruti