தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, அரவாண், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கியவர் தற்போது ஜிவி பிரகாஷ் வைத்து ஜெயில் படத்தை இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ந்தி நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் அப்டேட் கிடைத்தது. 

Vishnu Vishal To Act In Vasantha Balans Next Movie

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டிக்டாக் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் சோஷியல் மீடியாவில் தோன்றி ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். 

Vishnu Vishal To Act In Vasantha Balans Next Movie

இந்நிலையில் இன்று கலாட்டா முகநூல் லைவ் சேட்டில் பங்குபெற்றார் இயக்குனர் வசந்தபாலன். அப்போது பேசியவர், தனது அடுத்த படைப்பு குறித்து பதிவு செய்தார். நடிகர் விஷ்ணு விஷால் வைத்து புதிய படத்தை துவங்கவுள்ளதாக கூறினார். அதன் பிறகு மீண்டும் ஜிவி பிரகாஷ் வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்தார். இதுதவிர்த்து வெப் சீரிஸ் எடுக்கும் முயற்சியில் உள்ளதாக கூறினார்.