இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் அட்லீ.ராஜா ராணி படத்தின் மூலம் ரொமான்டிக் இயக்குனராக அறிமுகமான அட்லீ அடுத்ததாக தளபதி விஜயுடன் இணைந்து தெறி,மெர்சல்,பிகில் என்று படங்களை இயக்கினார் அட்லீ.

மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.கமர்சியல் மாஸ் மசாலா டைரக்டர் ஆக அட்லீ வளந்துள்ளார்.இதனை அடுத்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை அட்லீ இயக்கவுள்ளார் என்றும் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தகவல்கள் கிடைத்திருந்தது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த படத்தின் ப்ரோமோ ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது என்ற தகவல் கிடைத்தது.இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இந்த படத்தில் ஷாருக் கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.இந்த படத்தின் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.

இவரை தவிர ப்ரியாமணி,யோகி பாபு, Sanya Malhotra,Sunil Grover உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க , ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் புனேவில் தொடங்கியுள்ளது , இதற்காக நயன்தாரா,ப்ரியாமணி உள்ளிட்டோர் புனேவில் இருக்கும் புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றன.