எனிமி படத்தின் டக்கரான டும் டும் பாடல் இதோ !
By Aravind Selvam | Galatta | September 03, 2021 19:51 PM IST
விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆனந்த் ஷங்கர்.ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனராக இருந்து ஆக்ஷன் இயக்குனராக முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆனந்த் ஷங்கர்.இதனை தொடர்ந்து சீயான் விக்ரம் நடித்த இருமுகன் படத்தினை இயக்கினார்.
இரட்டை வேடங்களில் விக்ரம் நடித்த இந்த படமும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.அடுத்ததாக விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவான நோட்டா படத்தினை இயக்கியிருந்தார்,இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.அடுத்ததாக விஷால்-ஆர்யா இணைந்து நடித்து வரும் Enemy படத்தினை இயக்கி வருகிறார்.
ஆர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் குமார் இந்த படத்தினை தயாரித்துள்ளார்.மிர்னாலினி ரவி,மம்தா மோகன்தாஸ்,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இரு இளம் நடிகர்கள் இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.இந்த படத்தின் விறுவிறுப்பான டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் இரண்டாவது பாடலான டும் டும் பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Vishal - Arya's Enemy: Second Single 'Tum Tum' is now out | Watch Video Here!
03/09/2021 07:17 PM
WATCH: Kamal Haasan strikes in this new promo of Bigg Boss 5 Tamil!
03/09/2021 06:00 PM