தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அதர்வா நடிப்பில் இந்த ஆண்டில் (2022) இதுவரை வெளிவந்த குருதி ஆட்டம் மற்றும் ட்ரிக்கர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த மற்றும் நிறங்கள் மூன்று என வரிசையாக அதர்வாவின் திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே அதர்வாவின் அடுத்த அதிரடி திரைப்படமாக வெளிவர தயாராகியுள்ளது பட்டத்து அரசன் திரைப்படம். தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் பட்டத்து அரசன் திரைப்படத்தை களவாணி, வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ளார்.

அதர்வாவுடன் இணைந்து நடிகர் ராஜ்கிரண் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பட்டத்து அரசன் படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, RK.சுரேஷ், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லோகநாதன்.S ஒளிப்பதிவு செய்துள்ள, பட்டத்து அரசன் படத்திற்கு ராஜா முகமது படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் பட்டத்து அரசன் திரைப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் பட்டத்து அரசன் திரைப்படத்திலிருந்து அஞ்சனத்தி எனும் ரொமான்டிக்கான பாடல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அட்டகாசமான அஞ்சனத்தி வீடியோ பாடல் இதோ…