விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அஷ்வின் குமார்.இதற்கு முன் சீரியல்கள்,ஆல்பம் பாடல்கள்,படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அஷ்வின்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து இவர் நடித்த ஆல்பம் பாடல்கள் பெரிய வெற்றியை அடைந்தன.அடுத்ததாக Trident Arts நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாகும் வாய்ப்பை பெற்றார் அஷ்வின்.என்ன சொல்ல போகிறாய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் முதலில் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது பின்னர் சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஜனவரி மாதத்திற்கு தள்ளிப்போனது.

இந்த படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் காட்சியில் எமோஷனலான அஷ்வின் என் படத்தினை பார்க்க இவ்ளோ பேர் இருப்பாங்கன்னு எதிர்பார்கல , படம் ரிலீஸ் ஆனதே பெரிய விஷயம் மக்களுக்கு படம் பிடிச்சுருக்குனு கேக்கும்போது சந்தோஷமா இருக்கு என்று தெரிவித்துள்ளார்.இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்