பிரபலமான தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் முன்னணி செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தவர் அனிதா சம்பத். இவரது அழகான தமிழ் உச்சரிப்பு கொண்ட செய்தி வாசிப்பிற்கு என்று தமிழகத்தில் தனி ரசிகர் கூட்டமே உண்டு. தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அனிதா சம்பத்  சிறப்பாக விளையாடி பிக்பாஸிலும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

தொடர்ந்து வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் அனிதா சம்பத், தளபதி விஜய்யின் மாஸ்டர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார், சூர்யாவின் காப்பான் உள்ளிட்ட படங்களில் செய்தியாளராகவே நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ்-க்கு பிறகு விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்ற அனிதா சம்பத் தற்போது விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் களமிறங்குகிறார். இதுகுறித்து அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் டிவியின் ஈரோடு மகேஷ் உடன் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் புகைப்படங்களை பகிர்ந்து, 

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக என் முதல் அறிமுகம்.அதுவும் நான் நேசிக்கும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சியில் அறிமுகமாவதில் பெரும் மகிழ்ச்சி.😇
சுற்றிலும் அத்துனை தமிழ் ஆர்வலர்களும்,தமிழ் சார்ந்த ஆய்வுகள் நடத்துபவர்களும் பேசுவதை, ஏதோ இன்னும் பேச்சே தொடங்காத சிறு பிள்ளை போல் வாயடைத்து போய் பிரம்மித்து பார்த்தேன்!😯
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ஆளுமைகளை மீண்டும் இணைக்கும் "தமிழ் பேச்சு சங்கமம்" சிறப்பு நிகழ்ச்சி!
தங்கையை ஊக்கப்படுத்தி வழிநடத்திய ஈரோடு மகேஷ் அண்ணனுக்கும், நிகழ்ச்சி இயக்குனர் திரு.துரை அவர்களுக்கும் மிக்க நன்றி🥰🙏🏻

என தெரிவித்துள்ளார். அனிதா சம்பத்தின் அந்த பதிவு இதோ…