தமிழ் திரையுலகின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அசோக்செல்வன் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சூதுகவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக களமிறங்கினார். தொடர்ந்து தெகிடி, Sometimes  உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். 

கடைசியாக தமிழில் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. மேலும் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த பிரம்மாண்ட படைப்பான மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து  இயக்குனர் விஷால் வெங்கட் எழுதி இயக்கத்தில், நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள். நடிகர் அசோக் செல்வன் உடன் இணைந்து அபிஹாசன், மணிகண்டன், பிரவீன் ராஜா, ரேயா, ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், அனுபமா குமார், பானுப்பிரியா மற்றும் இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

ஏஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரேயா இணைந்து தயாரிக்க டிரைடன்ட் ஆர்ட் நிறுவனம் வழங்கும் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வருகிற ஜனவரி ஆம் தேதி உலகெங்கும்  ரிலீசாக உள்ள சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் புதிய ப்ரோமோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ இதோ…