நானியின் ஷியாம் சிங்கா ராய் பட DELETED SCENE இதோ!
By Anand S | Galatta | January 22, 2022 20:03 PM IST

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் நானி அடுத்ததாக நஸ்ரியா உடன் இணைந்து அன்டே சுந்தரனிக்கி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகை தாண்டி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த நானியின் நான் ஈ, கேங் லீடர், ஜெர்ஸி உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழிலும் ஹிட்டடித்தது.
முன்னதாக நடிகர் நானி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஷியாம் சிங்கா ராய். ஷியாம் சிங்கா ராய் படத்தில் நடிகர் நானி கதாநாயகனாக நடிக்க, சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குனர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில், நிஹாரிகா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், உருவாகியிருக்கும் ஷியாம் சிங்கா ராய் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஷியாம் சிங்கா ராய் படத்திற்கு சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில், நவீன் நூலின் படத்தொகுப்பு செய்துள்ளார் மிக்கி.ஜே.மேயர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ஷியாம் சிங்கா ராய் திரைப்படத்திலிருந்து DELETED காட்சி தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நானியின் ஷியாம் சிங்கா ராய் திரைப்படத்தின் DELETED காட்சி வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.