பக்கத்து வீட்டுக்காரன் முதல் சொந்தக்காரன் வரை மொத்தம் 8 பேரால் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 18 வயது இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் அதுவும் கேரளாவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரளாவில் குடும்ப விழா என்ற பெயரில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்த வழக்கில், ஒரு குரூப்பை போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தியில் அடுத்தடுத்து பல அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 

இந்த சம்பவத்தின் வடு இன்னும் மறைவதற்குள், கேரளாவில் அடுத்த ஒரு பாலியல் பலாத்காரம் சம்பவம் அரங்கேறி இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் தேன் கிப்பாலம் பகுதியில் 18 வயதான பெண், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த மாணவி, தனது 15 வயதில், அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். 

அப்போது, பகலில் இந்த மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு, தினமும் இரவில் தான் வீடு திரும்புவார்கள்.

இப்படியான சூழலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாணவிக்கு 15 வயது இருக்கும் போது, இந்த மாணவியை அவரின் பக்கத்து வீட்டுக்காரர் முதலில் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

ஆனால், அந்த பக்கத்து வீட்டு நபர் அந்த பகுதியில் அந்த சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர் என்பதால், அவர் மீது அந்த சிறுமியின் பெற்றோரால் எந்த விதமான நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. 

அதன் பிறகு, அந்த மாணவியை, அவரின் உறவுக்காரர் ஒருவரும், அதன் தொடர்ச்சியாக அந்த பகுதியில் உள்ள மொத்தம் மேலும் 6 பேர் என அந்த மாணவியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இப்படியாக, பக்கத்து வீட்டுக்காரன் முதல் சொந்தக்காரன் வரை மொத்தம் 8 பேரால் அந்த மாணவி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் கடும் மனமுடைந்து அந்த மாணவி, தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்து உள்ளார்.

அந்த நேரம் பார்த்து, சிறுமியன் தாயார் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்த போது, தனது வீட்டின் ​​​​அறையில் சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து பதறித் துடித்து உள்ளார்.

உடனடியாக, அந்த மாணவியை மீட்ட அவரது பெற்றோர், அந்த மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, செல்லும் வழியிலேயே அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால், இந்த மாணவி கடந்த 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டு வரையில், இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களைப் பற்றி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த வழக்கில், போலீசார் தற்போது நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளில் 7 பேரை தற்போது கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.