தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகிகளில் ஒருவர் ஸ்வாகதா கிருஷ்ணன்.தனது மயக்கும் குரலால் பல சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்த இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.பாடல் பாடுவது மட்டுமின்றி மியூசிக் கம்போஸிங்.மாடலிங் உள்ளிட்டவற்றிலும் அசத்துவார் ஸ்வாகதா.

இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் இன்ஸ்டன்ட் ஹிட் அடித்து விடும்,விரைவில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார் ஸ்வாகதா.இவரது புகைப்படங்கள் லைக்குகளை அள்ள இவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன.அதில் இவர் ஹீரோயினாக நடித்துள்ள முதல் படம் காயல் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து இன்ட்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்வாகதா.அடுத்து வெளிவர உள்ள சில படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார் ஸ்வாகதா.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தற்போது ஒரு சூப்பர் போஸ்டை பகிர்ந்துள்ளார்.

பலவிதமான பிரச்சனைகளில் சிக்கி தவித்து அதிலிருந்து எப்படி மீண்டு வந்து மனதையும்,உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் என்பது குறித்து ஸ்வாகதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இவரது இந்த இன்ஸ்பயரிங் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.