தமிழக சின்னத்திரை ரசிகர்கள் விரும்பும் அசத்தலான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை வழங்கி வரும் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. வழக்கம்போல் இந்த முறையும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

 இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாய் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. வருகிற ஜனவரி 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களிலிருந்த போட்டியாளர்களே மீண்டும் களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அபிநய் குறித்து பலவிதமான விவாதங்களும் சர்ச்சைகளும் நிகழ்ந்து வாராவாரம் பேசு பொருளாக உலவிய நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் நிறைவுக்கு பிறகு முதல்முறையாக பாவனி, அபிநயை குறித்து பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த பாவனி, “இன்னும் அபிநயுடன் பேசி வருகிறீர்களா?” என்று கேட்ட கேள்விக்கு, “பிக் பாஸ் போட்டியின் ஆரம்பத்தில் நடந்த ஒரு சில பிரச்சினைகளின் போது எப்படியாக இருந்தாலும் இந்த நபர் உடன் வீட்டிற்குள் 100 நாட்கள் இருக்க வேண்டி இருக்குமே என்ற காரணத்திற்காக தொடர்ந்து பேசி வந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் அதிகப்படியான பிரச்சினைகளை சந்தித்த பிறகு பேசுவதை நிறுத்தி விட்டேன். இப்போது பேசுவதில்லை.” என தெரிவித்துள்ளார். பாவனி பேசிய அந்த வீடியோ இதோ…