"அட்லீயின் முதல் பாலிவுட் படமான ஜவான் பட டீசர் எப்போது?"- ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கானின் சுவாரசிய பதில் இதோ!

ஷாருக் கான் அட்லீ கூட்டணியின் ஜவான் பட டீசர் அப்டேட்,shah rukh khan answered fans questions about jawan teaser in twitter | Galatta

முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கி இருக்கும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தான் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜவான் திரைப்படத்தின் டீசர் குறித்து ரசிகர்களிடம் கேள்விக்கு நடிகர் ஷாருக் கான் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் உலக அளவில் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பதான் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பதான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஷாரூக் கான் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், PK உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகும் டங்கி திரைப்படத்தில் தற்போது ஷாரூக் கான் நடித்து வருகிறார். மேலும் சல்மான் கான் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் டைகர் 3 படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் ஷாரூக் கான் நடிக்க இருக்கிறார்.

இந்த வரிசையில் ஷாருக் கான் நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகி வரும் முக்கிய திரைப்படம் தான் ஜவான். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க, மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்திற்கு GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் அட்லி மற்றும் நயன்தாராவிற்கு மட்டுமல்லாது ஒளிப்பதிவாளர் விஷ்ணு, படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத்துக்கும் ஜவான் திரைப்படம் தான் முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக ஜவான் படம் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவான் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு தொடர்ச்சியாக ஷாருக்கான் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் ஜவான் படத்தின் டீசர் எப்போது என கேட்க, “அது எல்லாமே தயாராக இருக்கிறது மற்ற விஷயங்கள் அதற்கான இடங்களில் இருக்கின்றன. கவலை வேண்டாம் எல்லாமே நல்ல இடத்தில் தான் இருக்கின்றன.” என பதில் அளித்து இருக்கிறார். எனவே வெகு விரைவில் ஜமான் படத்தின் டீசர் குறித்து அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். நடிகர் ஷாருக் கானின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…
 

It’s all ready getting other assets in place. Don’t worry it’s all in a happy place…#Jawan https://t.co/U6rdgiv2pD

— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2023

மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் கீர்த்தி சுரேஷ் - தமன்னா... வேதாளம் ஹிந்தி ரீமேக் போலா ஷங்கர் பட அசத்தலான டீசர் இதோ!
சினிமா

மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் கீர்த்தி சுரேஷ் - தமன்னா... வேதாளம் ஹிந்தி ரீமேக் போலா ஷங்கர் பட அசத்தலான டீசர் இதோ!

ரிலீஸுக்கு ரெடியான மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்... சென்சார் குறித்த அதிரடியான அறிவிப்பு இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியான மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்... சென்சார் குறித்த அதிரடியான அறிவிப்பு இதோ!

சினிமா

"லியோ பட 'நா ரெடி' பாடலுக்கு தளபதி விஜயின் ரியாக்ஷன் என்ன?"- முதல் முறை மனம் திறந்த விஷ்ணு எடவன்! ட்ரெண்டிங் வீடியோ