தமிழ் திரையுலகின் அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் யானை. முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த யானை திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது.

முன்னதாக வெப்சீரிஸிலும் களமிறங்கியுள்ள அருண் விஜய், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடித்த தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸும் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் பார்டர், பாக்சர் & அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் சினம். இயக்குனர் GNR.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் உடன் இணைந்து பல்லாக் லால்வானி கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி ஆகியோர் சினம் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மூவிஸ் ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் R.விஜய்குமார் தயாரித்துள்ள சினம் படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவில், ஷபீர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நீண்ட நாள்களாக ரிலீஸுக்கு காத்திருந்த சினம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Here it is!!💥 A story that needs to be told!!
#Sinam releasing worldwide on Sept 16th.

#SinamfromSept16 @MSPLProductions @gnrkumaravelan #Vijaykumar #PallakLalwani @kaaliactor @gopinath_dop @shabirmusic @madhankarky @silvastunt @DoneChannel1 @Muzik247in @CtcMediaboy pic.twitter.com/X3JwhU21za

— ArunVijay (@arunvijayno1) August 22, 2022