தனக்கே உரித்தான பாணியில் ஸ்டைலான திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். அந்த வகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்து வெளிவர தயாராகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

சிலம்பரசன்.TR-கௌதம் வாசுதேவ் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் வெற்றி கூட்டணி 3-வது படமாக தயாராகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேசன் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்திலிருந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த 2 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.

வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் பெரிய அரங்கில் பிரமாண்டமான மேடை செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படக்குழுவினர் இசை வெளியீட்டு விழாவின் பிரம்மாண்ட மேடையின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ…
 

Treat yourself to the first glimpse of #VendhuThanindhathuKaadu trailer & audio launch stage sketches.

🗓 - SEPTEMBER 2nd
⏰ - 5:00 PM@SilambarasanTR_ @menongautham @arrahman @VelsFilmIntl @IshariKGanesh @Udhaystalin @SiddhiIdnani @thinkmusicindia pic.twitter.com/M4N8okZtOR

— Red Giant Movies (@RedGiantMovies_) August 22, 2022