அன்னையர் தின சர்ப்ரைஸ்: நயன்தாரா தன் குழந்தைகளுடன் இருந்த முதல் தருணம்... இதுவரை வெளிவராத ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ!

நயன்தாரா தன் குழந்தைகளுடன் இருந்த முதல் தருணம்,vignesh shivan shared unseen photos of nayanthara first moment with her babies | Galatta

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முதலில் தனது குழந்தைகளை கையில் ஏந்திய தருணத்தின் இதுவரை வெளிவராத புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அன்னையர் தினமான இன்று நடிகை நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் குழந்தைகளோடு நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரட் செலிபிரிட்டி ஜோடியாக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா ஜோடியின் திருமணம் கடந்த (2022)ஆண்டில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களும் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அழகான இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகினர். 

தங்களது அழகிய ஆண் குழந்தைகள் இருவருக்கும் உயிர் ருத்ரோநீல் N சிவன் மற்றும் உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டதாகவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அறிவித்தனர். குழந்தைகள் வந்ததிலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் குழந்தைகளோடு வெளியில் சொல்லும் ஒவ்வொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டன. இந்த நிலையில், தனது முதல் அன்னையர் தினத்தை கொண்டாடும் நடிகை நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் மருத்துவமனையில் முதல் முறை குழந்தைகளின் கையில் வேண்டிய நயன்தாராவின் இதுவரை வெளிவராத புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், “உலகின் சிறந்த அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்” என பதிவிட்டார். மேலும் வீட்டில் தனது குழந்தைகளோடு நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், “அன்புள்ள நயன்… தாயாக உனக்கு 10க்கு 10...  உனக்காக இன்னும் அதிகமான காதலும் சக்தியும் என் தங்கமே!!! உனது முதல் அன்னையர் தினம்... நம் கனவு நினைவானது... ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளை எங்களுக்கு கொடுத்ததற்கும் உலகின் எல்லா ஆசீர்வாதங்களையும் எங்களுக்கு பொழிந்ததற்கும் நன்றி கடவுளே என் உயிர் மற்றும் உலகு என் உயிர் உலகுடன்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்.

இதேபோல் தனது அம்மா மீனா குமாரி அவர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார் விக்னேஷ் சிவன். அம்மா மீனா குமாரியுடன் துபாயில் இருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மீனா குமாரி! எனது அன்பான மீ... இந்த வாழ்க்கையை எங்களுக்கு கொடுப்பதற்காக நீ எடுத்த முயற்சிகளும் நீ கொடுத்த அன்பும் தான் இந்த உலகிலேயே புர்ஜ் கலீஃபாவை விட உயரமானது. உலகின் சிறந்த அம்மா!!” என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த பதிவுகளையும் புகைப்படங்களையும் கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

 

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

சினிமா

"அன்னையர் தினத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாரை கௌரவித்த தமிழ்நாடு ஆளுநர்!"- விவரம் உள்ளே

‘நான் 10கிலோ இவர் 12கிலோ எடை குறைத்தோம்!’- பா.ரஞ்சித்தின் ஸ்போர்ட்ஸ் பட அனுபவங்களை பகிர்ந்த சாந்தனு - ப்ரித்வி! வைரல் வீடியோ
சினிமா

‘நான் 10கிலோ இவர் 12கிலோ எடை குறைத்தோம்!’- பா.ரஞ்சித்தின் ஸ்போர்ட்ஸ் பட அனுபவங்களை பகிர்ந்த சாந்தனு - ப்ரித்வி! வைரல் வீடியோ

தனுஷின் '100 கோடி' பிளாக்பஸ்டர் பட இயக்குனரோடு கைகோர்க்கும் துல்கர் சல்மான்... அசத்தலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

தனுஷின் '100 கோடி' பிளாக்பஸ்டர் பட இயக்குனரோடு கைகோர்க்கும் துல்கர் சல்மான்... அசத்தலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!